கோவை சம்பவம் எதிரொலி; பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
ஈரோடு : கோவையில் பா.ஜ., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, கேரளாவில் பந்த் போன்ற காரணத்தால், ஈரோட்டில் பா.ஜ., அலுவலகம் வீடு, முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்த நிலையில், சில இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கேரளாவில்


ஈரோடு : கோவையில் பா.ஜ., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, கேரளாவில் பந்த் போன்ற காரணத்தால், ஈரோட்டில் பா.ஜ., அலுவலகம் வீடு, முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்த நிலையில், சில இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உட்பட பல அமைப்பு சார்பில், பந்த் அழைப்பு விடுத்து அரசு பஸ்கள், பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஈரோடு, 46புதுார் அருகே உள்ள பா.ஜ., அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன், பன்னீர்செல்வம் பூங்கா வளாகத்தில் உள்ள தலைவர்கள் சிலைகள், முக்கிய கோவிங்கள் உட்பட பல்வேறு இடங்களில் போலீஸ் சீருடையுடனும், சீருடை இல்லாத போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பயணிகள் சோதனைக்குப்பிறகே டேஷனுக்குள் செல்லவும், வெளியே வரவும் அனுமதிக்கப்
பட்டனர்.


தவிர, பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் சண்முகம், மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் உட்பட பலரது வீடுகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்ட அளவில் இதே நிலை நீடிக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X