கொடுமுடியில் நிற்காத விரைவு ரயில்கள்; பக்தர்கள், பிற மாநில பயணிகள் பாதிப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
கொடுமுடி : கொடுமுடியில் விரைவு ரயில்கள் நின்று செல்ல, உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழு செயலாளர் ராஜா சுப்ரமணியன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொடுமுடி சுற்றுலா தலமாகவும், கொங்கு ஏழு ஸ்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநில



கொடுமுடி : கொடுமுடியில் விரைவு ரயில்கள் நின்று செல்ல, உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக குழு செயலாளர் ராஜா சுப்ரமணியன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொடுமுடி சுற்றுலா தலமாகவும், கொங்கு ஏழு ஸ்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநில பக்தர்கள் தினமும் வருகின்றனர். இதில்லாமல் ஆடி 18, சித்திரை தேர்த்திருவிழா, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.

கொரோனா காலத்துக்கு முன், கொடுமுடியில் நின்று சென்ற துாத்துக்குடி-மைசூரு, எர்ணாகுளம்-காரைக்கால், கோவை-ராமேஸ்வரம் உள்ளிட்ட மூன்று விரைவு ரயில்கள் தற்போது கொடுமுடியில் நிற்பதில்லை. மேலும் மயிலாடுதுறை-மைசூரு, கோவை-மயிலாடுதுறை (ஜன சதாப்தி), கோவை-மன்னார்குடி (செம்மொழி எக்ஸ்பிரஸ்), கோவை-நாகர்கோவில் உள்ளிட்ட 4 விரைவு ரயில்களும் கொடுமுடியில் நிற்காமல் செல்கின்றன.

இதனால் கொடுமுடிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நலன் கருதி, நிற்காத ரயில்களை கொடுமுடியில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுமுடி ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையத்தை காலை, 8:௦௦ மணி முதல் இரவு, 8:௦௦ மணி வரை செயல்படுத்த வேண்டும். அதற்கெனி அலுவலகம், புக்கிங் கிளார்க் நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X