தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
செஞ்சி-செஞ்சியில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் அமைச்சர் மஸ்தான் மாவட்ட செயலாளராக தொடர முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் தற்போது அமைச்சர் மஸ்தான் மாவட்ட செயலாளராக உள்ளார்.நேற்று
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்



செஞ்சி-செஞ்சியில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் அமைச்சர் மஸ்தான் மாவட்ட செயலாளராக தொடர முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் தற்போது அமைச்சர் மஸ்தான் மாவட்ட செயலாளராக உள்ளார்.நேற்று செஞ்சியில் மாவட்ட செயலாளர் தேர்தலில் ஓட்டு போடும் அதிகாரம் உள்ள ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், செஞ்சி ஒன்றிய செயலாளர் விஜய குமார், அமைச்சர் மஸ்தானை மீண்டும் மாவட்ட செயலாளராக முன் மொழிந்தார். தொடர்ந்து மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வழி மொழிந்தார்.தீர்மானத்தை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளும் வழி மொழிந்து கையெழுத்திட்டனர். இதையடுத்து இன்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அமைச்சர் மஸ்தான் தி.மு.க., தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X