கடலரிப்பால் மீனவ கிராமங்களுக்கு ஆபத்துமாஜி எம்.பி., ராமதாஸ் எச்சரிக்கை

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மீனவ கிராமங்களை அழிவிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் எம்.பி., ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கடலுார் தேவனாம்பட்டினம் அருகில் உள்ள தாழங்குடா மீனவ கிராமம், ஒவ்வொரு இயற்கைச் சீற்றத்தின் போதும் பாதுகாப்பு இல்லாமல் சீரழிந்து வருகிறது. இதனை தடுக்கவும், அங்கு மீன்பிடித் துறைமுகம் அமைக்க தமிழக



புதுச்சேரி-புதுச்சேரி மீனவ கிராமங்களை அழிவிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் எம்.பி., ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கடலுார் தேவனாம்பட்டினம் அருகில் உள்ள தாழங்குடா மீனவ கிராமம், ஒவ்வொரு இயற்கைச் சீற்றத்தின் போதும் பாதுகாப்பு இல்லாமல் சீரழிந்து வருகிறது. இதனை தடுக்கவும், அங்கு மீன்பிடித் துறைமுகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதில், கரையில் இருந்து கடலுக்கு சுமார் 250 மீட்டர் துாரத்திற்கு பாறாங்கற்களை கொட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதனால், புதுச்சேரி மாநிலத்தில் கடலரிப்பு காரணமாக மீனவ கிராமங் கள் பாதிப்பிற்கு உள்ளாகும். இந்நிலையை கட்டுக்குள் கொண்டு வராமல் காலம் தாழ்த்தினால், மீனவ கிராமங்களில் கடற்கரையும், அருகில் உள்ள வீடுகளும் விரைவில் இடிந்து அழிவதற்கு வாய்ப்புள்ளது. மீண்டும் ஒரு சுனாமி சூழ்நிலையை புதுச்சேரி எதிர்நோக்கி உள்ளதாகவே தெரிகிறது.சுற்றுலா நோக்கில் புதுச்சேரி அரசு எடுத்து வரும் கடற்கரை சார்ந்த அனைத்து திட்டங்களும் இதனால் பாதிக்கப்படும். எனவே புதுச்சேரி முதல்வரும், மீன்வளத்துறை அமைச்சரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.மேலும், அரசின் மீன்வளம், துறைமுகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கடலுா ருக்கு சென்று நிலைமையை அறிந்து, புதுச்சேரி மீனவ கிராமங்களை அழிவிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X