காரைக்கால்---குடிப்பதை மகன் கண்டித்ததால் மனமுடைந்த தந்தை துாக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.காரைக்கால் நிரவி அக்கரைவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,48; எலக்ட்ரீசியன். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல், குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். அதனை அவரது மகன் பிரபு கண்டித்தார்.அதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மனைவி வித்யா அளித்த புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.