விஷவண்டுகள் தீ வைத்து அழிப்பு 

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி கோர்ட் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த விஷ வண்டு கூடுகளை வனத்துறையினர் தீ வைத்து அழித்தனர். புதுச்சேரி வனத்துறை அலுவலகம் அருகே ஏ.எப்.டி. மில் பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. அதனை வனத்துறையினர் சில தினங்களுக்கு முன் தீ வைத்து அழித்தனர்.தொடர்ந்து, அங்கு இருந்த விஷ வண்டுகள் கோர்ட் எதிரே உள்ள குடியிருப்புகள் நிறைந்த நாயக்கர்
விஷவண்டுகள் தீ வைத்து அழிப்பு 



புதுச்சேரி-புதுச்சேரி கோர்ட் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த விஷ வண்டு கூடுகளை வனத்துறையினர் தீ வைத்து அழித்தனர்.

புதுச்சேரி வனத்துறை அலுவலகம் அருகே ஏ.எப்.டி. மில் பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. அதனை வனத்துறையினர் சில தினங்களுக்கு முன் தீ வைத்து அழித்தனர்.தொடர்ந்து, அங்கு இருந்த விஷ வண்டுகள் கோர்ட் எதிரே உள்ள குடியிருப்புகள் நிறைந்த நாயக்கர் தோட்டம் பகுதிகளில் பல்வேறு மரங்களில் கூடு கட்டி இருந்தது. இந்த விஷ வண்டுகள் நேற்றிரவு திடீரென பொதுமக்களை தாக்கியது. அதில் பெண் ஒருவர் முகம் வீங்கி மயக்கமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுபற்றி தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை மீண்டும் தீ வைத்து அழித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X