எங்கு இருந்தும் எந்த நேரத்திலும் இணையவழியில் பட்டா மாற்றம்

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை : வருவாய் துறை சார்பில் 'எங்கிருந்தும் எந்த நேரத்திலும்' என்ற இணையவழி சேவை வழியாக பொது மக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி; நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதியை முதல்வர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார்.தமிழகத்தில் நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்
இணையவழியில், பட்டா, வருவாய் துறை, நில உரிமையாளர்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை : வருவாய் துறை சார்பில் 'எங்கிருந்தும் எந்த நேரத்திலும்' என்ற இணையவழி சேவை வழியாக பொது மக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி; நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதியை முதல்வர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் வழியாக விண்ணப்பிக்கின்றனர். அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன.தற்போது பொதுமக்கள் வசதிக்காக எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் பட்டா மாறுதல் கோரி tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி துவக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


இப்புதிய சேவையால் பொது மக்கள் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகங்கள் பொது சேவை மையங்கள் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின், பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடி ஆகியவற்றை 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' இணையவழி சேவை வழியாக, கட்டணமின்றி மக்கள் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் பொது சேவை மையங்களுக்கு செல்வதும், தாலுகா அலுவலகங்களில் இடைத்தரகர்களால் அவதிப்படுவதும் தவிர்க்கப்படும்.


வரைபடங்கள் பதிவிறக்கம்


தமிழகத்தில் நகர்ப்புற நில ஆவணங்கள், 2014 முதல் 2017 வரையிலான காலத்தில் கணினி மயமாக்கப்பட்டன. 'தமிழ் நிலம் நகர்ப்புறம்' என்ற மென்பொருள் வழியாக, படிப்படியாக இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.கணினி மயமாக்கப்பட்ட 'பிளாக்' வரைபடங்களை, தனித்தனி நகர புலங்களுக்கான வரைபடங்களாக, eservices.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்புதிய வசதி வழியாக, பொதுமக்கள் நகர்ப்புற நில வரைபடங்களை இணைய வழியில், கட்டணமின்றி பெறலாம். இவ்வரைபடம் மனை அங்கீகாரம், வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியம்.இனி பொது மக்கள், நகர நில வரைபடம் பெற, தாலுகா அலுவலகம் வருவது தவிர்க்கப்படும்.நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், துறை செயலர் குமார் ஜெயந்த், நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குனர் வினய் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
24-செப்-202218:45:20 IST Report Abuse
a natanasabapathy Yellaam paparil thaan. Yenakky therintha arasu ozhiyar veettu kadan mudinthu anaiththu aavanankaludan veettai meendum thanathu peyaril maarra sub registrar office senraar. Moonru maathankal izhuththadiththu vittu reconveyance deed kaalaavathi aakivittathu yenru koolaaka koorivittaarkal panaththaasai pidiththa pichchaikkaara aluvalarkal
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-செப்-202215:55:36 IST Report Abuse
Vijay D Ratnam அதெல்லாம் கிடக்கட்டும்,/// எதோ சொல்ல வந்தாரே, அதான் , சும்மா சொல்லுங்க ....
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
24-செப்-202214:12:00 IST Report Abuse
vpurushothaman வேளச்சேரியிலிருந்தும் " சபரி "நகரிலிருந்தும் பட்டா மாற்றிக் கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X