குடிமை பொருள் வழங்கல் துறை முற்றுகை; எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட 300 பேர் கைது

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி- ரேஷன் கடையை திறக்காததை கண்டித்து குடிமை பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எதிர்கட்சி தலைவர் சிவா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.மாநிலத்தில் ரேஷன் கடைகளை மூடும் முடிவை கைவிட வேண்டும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம்
குடிமை பொருள் வழங்கல் துறை முற்றுகை; எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட 300 பேர் கைது



புதுச்சேரி- ரேஷன் கடையை திறக்காததை கண்டித்து குடிமை பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எதிர்கட்சி தலைவர் சிவா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாநிலத்தில் ரேஷன் கடைகளை மூடும் முடிவை கைவிட வேண்டும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க.,வினர் நேற்று எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் குமார், குமாரவேல், செந்தில்குமார், குணாதிலீபன், பெல்லாரி, கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் லோகையன், சிறப்பு அழைப்பாளர்கள் நளினி சாரங்கன், கோபால், கார்த்திகேயன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தி.மு.க.,வினர் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து டி.நகர் போலீசார் எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ., க்கள் செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட 300 பேரை கைது செய்து கோரிமேடு அழைத்து சென்றனர். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.



கென்னடி 'மிஸ்சிங்'


இந்த போராட்டத்தில் கட்சியின் துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., வான அனிபால் கென்னடி, பங்கேற்கவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, அவர் காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. இருப்பினும் உப்பளம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப் பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X