ரேஷன் கடைகளை மூடும் ஆட்சி தேவையா?; எதிர்கட்சி தலைவர் சிவா கேள்வி

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-ரேஷன் கடை ஊழியர்களுக்கு இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ கட்டாத தலைமைச் செயலர், நிதி செயலர் மீது வழக்கு பதிவுச் செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா பேசினார்.ரேஷன் கடைகளை மூடுவதைக் கண்டித்து தி.மு.க., சார்பில் நடைபெற்ற குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு தலைமை தாங்கிய எதிர்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:என்.ஆர்.,காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி



புதுச்சேரி-ரேஷன் கடை ஊழியர்களுக்கு இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ கட்டாத தலைமைச் செயலர், நிதி செயலர் மீது வழக்கு பதிவுச் செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா பேசினார்.

ரேஷன் கடைகளை மூடுவதைக் கண்டித்து தி.மு.க., சார்பில் நடைபெற்ற குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு தலைமை தாங்கிய எதிர்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:என்.ஆர்.,காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றனர். ஆனால் ரேஷன் கடைகளில் அரிசி கூட வழங்கவில்லை. வறுமை கோட்டிற்கு கீழுள்ள சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கும், ஏ.ஏ.ஒய்., ரேஷன் கார்டுகளுக்கும் மட்டும் பணம் வழங்குகின்றனர்.ஏழைகளுக்கு அரிசி கூட தராமல் மோசமான நிர்வாகம் நடைபெறுகிறது. வெள்ளை அரிசி மாதம் 30 கிலோ வழங்கப்போவதாக அறிவித்ததும் வேண்டாம். பிரதமர் அறித்த பெஸ்ட் புதுச்சேரியும் வேண்டாம்.ஏற்கனவே வழங்கிய 10 கிலோ அரிசியாவது வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூட அதிகாரிகள் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.ரேஷன் கடைகளை மூடியுள்ளதற்கும், சம்பளம் வழங்காததால் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கும் ஆட்சியில் இருப்பவர்கள் வெட்கப்பட வேண்டும். ரேஷன் கடைகளை மூடும் ஒரு ஆட்சி தேவையா.ரேஷன் கடை ஊழியர்களுக்கு 4 ஆண்டாக இ.பி.எப்., ரூ.12 கோடி, இ.எஸ்.ஐ., ரூ.3.5 கோடி, கிராஜிவிட்டி ரூ.3.6 கோடி செலுத்தவில்லை. தனியார் நிறுவனங்களில் இ.பி.எப், இ.எஸ்.ஐ., கட்டாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.அதுபோல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இ.பி.எப், இ.எஸ்.ஐ கட்டாத தலைமைச் செயலர், நிதிச் செயலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சொசைட்டி மற்றும் பாப்ஸ்கோவின் கீழ் செயல்படும் ரேஷன் கடை ஊழியர்களை குடிமைப் பொருள் வழங்கல் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X