மருத்துவ காப்பீட்டு திட்டம் விழிப்புணர்வு பேரணி

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டு திட்டம் குறித்த கல்லுாரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை முதல்வர் துவக்கி வைத்தார்.பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் துவங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சுகாதாரத்துறை சார்பில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.சட்டசபை எதிரில் இருந்து
மருத்துவ காப்பீட்டு திட்டம் விழிப்புணர்வு பேரணி



புதுச்சேரி-பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டு திட்டம் குறித்த கல்லுாரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை முதல்வர் துவக்கி வைத்தார்.

பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் துவங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சுகாதாரத்துறை சார்பில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.சட்டசபை எதிரில் இருந்து புறப்பட்ட பேரணியை முதல்வர் ரங்கசாமி, கொடியசைத்துத் துவக்கி வைத்தார். சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, சமுதாயக் கல்லுாரியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று கம்பன் கலையரங்கில் நிறைவடைந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X