ஆதாருடன், மொபைல் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் உதவித் தொகை பெற விவசாயிகள், ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்,



புதுச்சேரி-பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் உதவித் தொகை பெற விவசாயிகள், ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், தங்களுடைய ஆதார் எண்ணுடன், மொபைல் எண்ணை இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,அதன்படி, பாண்டிச்சேரி கோட்டத்தின் கீழ் இயங்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த, தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்கள் மற்றும் கிளை அஞ்சலகங்களில் பணிபுரியும் தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களை அணுகி, தங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை உடனடியாக இணைத்து பயன் பெறலாம். இந்த சேவைக்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு பிரதம மந்திரி கிசான் இணையதளம் அல்லது செயலியில் ஆதார் எண்ணுடன் வரும் ஓடிபி (OTP) அங்கீகாரத்தை பயன்படுத்தி கேஒய்சி (KYC) செய்து கொள்ளலாம். மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறையுடன் புதுச்சேரி அஞ்சல் கோட்டமும், இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியும் இணைந்து கிராமங்களில் நடத்தும் சிறப்பு முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X