மனோகரா கார்னரில் நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க, மனோகரா கார்னரில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களின், நுழைவாயிலாக உள்ள, கரூர் மாநகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னரை சுற்றி, திண்ணப்பா கார்னர் சாலை, ஜவஹர் பஜார் சாலை,


கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க, மனோகரா கார்னரில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாவட்டங்களின், நுழைவாயிலாக உள்ள, கரூர் மாநகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னரை சுற்றி, திண்ணப்பா கார்னர் சாலை, ஜவஹர் பஜார் சாலை, திருச்சி சாலை மற்றும் கோவை சாலைகள் செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் அனைத்து பஸ்களும் மனோகரா கார்னர் வழியாகதான் வருகின்றன. மேலும் இதர வாகனங்களும் அதிக அளவில் கடந்து செல்வதால், இந்த இடத்தில் சாலையை கடக்க, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனால், மனோகரா கார்னரை சுற்றி, நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இந்த கோரிக்கையை கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக உள்ளது. கரூரை விட பரப்பளவு குறைந்த, வருமானம் குறைந்த நாமக்கல், திருச்செங்கோட்டில், பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி, நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்கள், மனோகரா கார்னரை சுற்றி செல்கின்றன. குறுகிய சாலையில் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்வதால் நடந்து செல்கிறவர்கள், விபத்துகளில் சிக்கி படுகாயமடைகின்றனர்.

தொழில் வளம் மிகுந்த, கரூர் நகருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இவர்கள் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும் மனோகரா கார்னர் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X