அலைடு ஹெல்த் சயின்ஸ் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா

Added : செப் 24, 2022 | |
Advertisement
பாகூர்-கிருமாம்பாக்கம், ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும், ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ்சில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் சண்முகசுந்தரம், அன்னப்பூரணி சண்முகசுந்தரம், வேந்தர் கணேசன், இயக்குநர் அனுராதா கணேசன் ஆகியோர் வழிக்காட்டுதலின் படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,
அலைடு ஹெல்த் சயின்ஸ் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா



பாகூர்-கிருமாம்பாக்கம், ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும், ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ்சில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் சண்முகசுந்தரம், அன்னப்பூரணி சண்முகசுந்தரம், வேந்தர் கணேசன், இயக்குநர் அனுராதா கணேசன் ஆகியோர் வழிக்காட்டுதலின் படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் புதுச்சேரி பிரிவு இயக்குனர் (பொறுப்பு) ஆன்ட்ரூ ஜான் வரவேற்றார். டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசுகையில்''அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தோற்றம், அலைடு ஹெல்த் சயின்ஸ் கடந்த ஆண்டுகளில் செய்த சாதனைகள், வேலை வாய்ப்பு, விளையாட்டுத் துறையில் கல்லுாரி மாணவர்களின் சாதனைகள் குறித்து பேசினார். ஆறுபடை வீடு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ஜெய்சிங் முன்னிலை வகித்து ''அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நன்மைகள், வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினரான திருக்கனுார் ஜெயக்கொடி மருத்துவமனையின் இயக்குனர் கபிலர், மருத்துவ சேவையில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவர்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார்.கல்வி ஒருங்கிணைப்பாளர் அனிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி சந்துரு செய்திருந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X