நிதித்துறை செயலர் மாற்றம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி நிதித்துறை செயலர் பிரசாந்த் கோயல் அதிரடியாக ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார்.புதுச்சேரி நிதித்துறை செயலராக கடந்தாண்டு அக்டோபர் 4ம் தேதி அருணாசல பிரதேச கேடர் பிரிவைச் சேர்ந்த 1993 பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரசாந்த் கோயல். பொறுப்பேற்றார்.அவர் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள் அதிரடியாக ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக



புதுச்சேரி-புதுச்சேரி நிதித்துறை செயலர் பிரசாந்த் கோயல் அதிரடியாக ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதுச்சேரி நிதித்துறை செயலராக கடந்தாண்டு அக்டோபர் 4ம் தேதி அருணாசல பிரதேச கேடர் பிரிவைச் சேர்ந்த 1993 பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரசாந்த் கோயல். பொறுப்பேற்றார்.அவர் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள் அதிரடியாக ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அருணாசல பிரதேச 2005 பேட்ஜ் அதிகாரி ராஜூ, புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்ச சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார்.பொதுவாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட மாநிலத்தில் மூன்று ஆண்டுகள் வரை பணியாற்றுவது வழக்கம்.ஆனால், பிரசாந்த் கோயல் புதுச்சேரி நிதித்துறை செயலராக பொறுப்பேற்ற ஓராண்டிற்குள் மாற்றப்பட்டுள்ளார்.சீனியர் அதிகாரியான பிராந்த் கோயல், புதுச்சேரி நிதித்துறை செயலராக பொறுப்பேற்றதும், அரசு துறைகளில் நிலவும் பிரச்னைகளை கண்டு, நிதி ஒதுக்கீடு தொடர்பான உத்தரவைகளை பிறப்பிக்கும் முன் நிதித் துறை ஒப்புதலை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.இதேபோல் முதல்வர், அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளில் குறைகளை சுட்டிகாட்டி திருப்பி அனுப்பினார். இதனால், திட்டங்கள் தாமதமாவதாகவும், மாநில வளர்ச்சி தடைபடுவதாக அரசு வட்டாரத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் நிதித் துறை செயலர் பிரசாந்த் கோயல் அதிரடியாக ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X