எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னைகளை முதல்வரால் தான் தீர்க்க முடியும் அமைச்சர் நமச்சிவாயம் 'பளீச்'

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-எம்.எல்.ஏ.,க்களின் பிரச்னையை முதல்வர்தான் தீர்த்து வைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.புதுச்சேரி சட்டசபையில் உண்ணாவிரதம் இருந்த பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,வின் போராட்டத்தை பழரசம் கொடுத்து முடித்து வைத்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்த அங்களான் எம்.எல்.ஏ.,விடம், நானும்,

புதுச்சேரி-எம்.எல்.ஏ.,க்களின் பிரச்னையை முதல்வர்தான் தீர்த்து வைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி சட்டசபையில் உண்ணாவிரதம் இருந்த பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,வின் போராட்டத்தை பழரசம் கொடுத்து முடித்து வைத்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்த அங்களான் எம்.எல்.ஏ.,விடம், நானும், சபாநாயகரும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதனையேற்று அவர், கவர்னரை சந்தித்து பிரச்னைகளை கூறினார்.அவரிடம், பிரச்னையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் எனக் கூறியுள்ளோம். அதனையேற்று அவர் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார்.அரசில் எந்த பிரச்னையானாலும் முதல்வர் தான் தீர்த்து வைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் அவர்தான். முதல்வர் அவர் தான், எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னையை முதல்வரால்தான் தீர்த்து வைக்க முடியும். அவர்தான் தீர்த்து வைக்க வேண்டும்.தொகுதி மக்களின் பிரச்னையை முதல்வரிடம் கூறிதான் தீர்வு காண முடியும். முதல்வரிடம் மீண்டும் பிரச்னை குறித்து பேசப்படும், சட்டசபையில் இது குறித்து பேசியபோது, நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறினார்.தற்போது முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கருத்தை தற்போது தெரிவித்துள்ளார். அதனுடைய வேகம் மற்றும் ஆழத்தை முதல்வரிடம் திரும்ப வலியுறுத்துவோம். முதல்வரை மாற்ற வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட கோரிக்கை. இது தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ.,வின் கருத்து கிடையாது. எம்.எல்.ஏ.,வின் பிரச்னையை தீர்த்து வைக்க தயாராக உள்ளோம். கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X