எம்.எல்.ஏ.,க்கள் உரிமைகளை பெற்றுத் தர வேண்டியது சபாநாயகரின் கடமை: எதிர்கட்சி தலைவர் சிவா

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-எம்.எல்.ஏ.,க்களின் உரிமைகளை பெற்றுத் தர வேண்டியது சபாநாயகரின் கடமை என எதிர்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார். சட்டசபையில் உண்ணாவிரதம் இருந்த அங்காளன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து ஆதரவு தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,வின் கவுரவம், மரியாதை, மக்களின் அங்கீகாரம் அனைத்தையும்



புதுச்சேரி-எம்.எல்.ஏ.,க்களின் உரிமைகளை பெற்றுத் தர வேண்டியது சபாநாயகரின் கடமை என எதிர்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார்.

சட்டசபையில் உண்ணாவிரதம் இருந்த அங்காளன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து ஆதரவு தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,வின் கவுரவம், மரியாதை, மக்களின் அங்கீகாரம் அனைத்தையும் கொச்சைப்படுத்தும் விதமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.எம்.எல்.ஏ.,வின் உரிமைகளை பெற்றுத்தர வேண்டியது சபாநாயகரின் கடமை. மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தர வேண்டும் என்பது தி.மு.க.,வின் கோரிக்கை. அதை சபாநாயகர் செய்வார் என நம்புகிறோம். எங்களிடமும் நிறைய கோரிக்கைகள் உள்ளது. விரைவில் அவரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். முதல்வர் மீதுதான் குற்றச்சாட்டு வைக்கின்றனர். முதல்வர் நிறைய செய்யாமல் உள்ளார் என்றாலும், சபாநாயகர் தனது கடமையில் இருந்து தவறக்கூடாது.முதல்வரை மாற்றுகிறார்களா? இல்லையா என்பதில் தி.மு.க.,விற்கு கவலை இல்லை. எங்களின் ஜனநாயக கடமையை நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்றோம். சட்டசபையில் பேசுகின்றோம், போராடி வருகிறோம். எங்கள் இயக்கம் மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் தொடக்கப்பட்ட இயக்கம். எனவே தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம். யார் வந்தாலும் புதுச்சேரிக்கு நல்லது செய்ய வேண்டும். புதுச்சேரி செழிப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். .அங்காளன் எம்.எல்.ஏ., போராட்டம் நியாயமானது. சபாநாயகர் அலுவலகத்தில் அரசியல் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. அந்த இருக்கையை பலர் அலங்கரித்துள்ளனர். அவரும் அலங்கரிக்க வேண்டும், அனைவருக்கும் அவர் பொதுவாக இருந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X