அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர காலக்கெடு நீட்டிப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-அரசு ஐ.டி.ஐ., க்களில் சேர வரும் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மேட்டுப்பாளையம் மற்றும் வில்லியனூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கு உடனடி சேர்க்கை வரும் 30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்



புதுச்சேரி-அரசு ஐ.டி.ஐ., க்களில் சேர வரும் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மேட்டுப்பாளையம் மற்றும் வில்லியனூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கு உடனடி சேர்க்கை வரும் 30ம் தேதிவரை நீட்டிக்கப்பட் டுள்ளது.மேட்டுப்பாளையம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீஷியன், ஏ.சி., மெக்கானிக், கட்டட பட வரைவாளர், கம்ப்யூட்டர் இயக்குபவர், எலக்ட்ரானிக் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பிளாஸ்டிக் செயல்முறை இயக்குபவர், ஆட்டோ பாடி பழுதுபார்த்தல் மற்றும் ஆட்டோ பாடி பெயின்டிங் போன்ற பயிற்சி பிரிவுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.வெல்டர், ஓயர்மென், மேசன் (கட்டடம் கட்டுபவர்) போன்ற பயிற்சி பிரிவுகளில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.விருப்பமுள்ள இருபாலரும் பத்தாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப் பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழுடன் நேரடியாக அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை அணுகலாம்.வில்லியனுாரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டட பட வரைவாளர், கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல் தொழிற்பிரிவுகளுக்கு உடனடி சேர்க்கை நடைபெறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X