நைனார்மண்டபத்தில்இலவச மருத்துவ முகாம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-நைனார்மண்டபம் மக்கள் நல இயக்கம், ஓம் வேலன் மருந்தகம் சார்பில் தொடர் இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 4ம் தேதி வரை நடக்கும் இந்த முகாமை பா.ஜ., வணிக பிரிவு தலைவர் சத்தியராஜ் துவக்கி வைத்தார். முகாமில் நீரிழிவு நோய், இதய நோய், எலும்பு முறிவு, குழந்தைகள் நலம், பெண்கள் நலம், காது, மூக்கு, தொண்டை, தோல் வியாதி, பொது நல மருத்துவம் குறித்து ஆலோசனை
நைனார்மண்டபத்தில்இலவச மருத்துவ முகாம்



புதுச்சேரி-நைனார்மண்டபம் மக்கள் நல இயக்கம், ஓம் வேலன் மருந்தகம் சார்பில் தொடர் இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 4ம் தேதி வரை நடக்கும் இந்த முகாமை பா.ஜ., வணிக பிரிவு தலைவர் சத்தியராஜ் துவக்கி வைத்தார். முகாமில் நீரிழிவு நோய், இதய நோய், எலும்பு முறிவு, குழந்தைகள் நலம், பெண்கள் நலம், காது, மூக்கு, தொண்டை, தோல் வியாதி, பொது நல மருத்துவம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.டாக்டர்கள் பாலமுருகன், வீரமணி, பாலாஜி, கார்த்திகேயன், அபிநயா, ரூபல்சமல், ஸ்ரீகாந்த், சுருதி, மாருதிராவ் ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

இந்த முகாம் தினசரி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை நைனார்மண்டபம், கடலுார் சாலையில் உள்ள ஓம்வேலன் மற்றும் நியூ ஓம்வேலன் மருந்தகங்களில் நடக்கிறது. முகாமில் ஒருவர், ஒரு டாக்டரை மட்டுமே அணுக முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவரை அணுக கட்டணம் செலுத்த வேண்டும். முன் பதிவிற்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, 94426-36821, 96002-54807, 70946-32835 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X