தாகூர் அரசு கல்லூரி முதல்வர் திடீர் உண்ணாவிரத போராட்டம்| Dinamalar

தாகூர் அரசு கல்லூரி முதல்வர் திடீர் உண்ணாவிரத போராட்டம்

Added : செப் 24, 2022 | |
புதுச்சேரி-கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து அலுவலக பணிகளை கவனித்து வரும் தாகூர் அரசு கல்லுாரி முதல்வர் 100ம் நாளான நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.புதுச்சேரி தாகூர் அரசு கல்லுாரி முதல்வராக உள்ள சசிகாந்ததாஸ். கடந்த 2017ம் ஆண்டு இக்கல்லுாரியின் முதல்வராக பொறுப்பேற்ற இவர், மாணவர் சேர்க்கையை அதிகரித்தார். அதனையொட்டி உட்கட்மைப்பு வசதிகளை ஏற்படுத்திட
தாகூர் அரசு கல்லூரி முதல்வர் திடீர் உண்ணாவிரத போராட்டம்



புதுச்சேரி-கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து அலுவலக பணிகளை கவனித்து வரும் தாகூர் அரசு கல்லுாரி முதல்வர் 100ம் நாளான நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.



புதுச்சேரி தாகூர் அரசு கல்லுாரி முதல்வராக உள்ள சசிகாந்ததாஸ். கடந்த 2017ம் ஆண்டு இக்கல்லுாரியின் முதல்வராக பொறுப்பேற்ற இவர், மாணவர் சேர்க்கையை அதிகரித்தார். அதனையொட்டி உட்கட்மைப்பு வசதிகளை ஏற்படுத்திட அதிகாரிகளிடம் முறையிட்டார். நடவடிக்கை இல்லை.அதனால், அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, கடந்தாண்டு 175 நாட்கள் தனது அலுவலக பணிகளை நாற்காலியில் அமராமல், தரையில் அமர்ந்து கவனித்தார். ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். கல்வி அமைச்சர், அரசு அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். இருப்பினும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 29ம் தேதி முதல் மீண்டும் தரையில் அமர்ந்து அலுவலக பணிகளை கவனித்து வருகிறார்.இப்போராட்டம் நேற்று 100 நாளை தொட்ட நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.இதுகுறித்து முதல்வர் சசிகாந்த தாஸ் கூறுகையில், கோரிக்ககைளை அரசு நிறைவேற்றாவிட்டால், வரும் அக்டோபர் மாதம் முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும், அதன்பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X