பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., திடீர் உண்ணாவிரதம்: முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-தனது தொகுதியை முதல்வர் புறக்கணிப்பாதாக கூறி சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் ஆதரவாளர்களுடன் சட்டசபை வளாகத்தில் திடீரென உண்ணாவிரத போராட்டத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி சட்டசபையில் 30 எம்.எல்.ஏ.,க்கள் (மூன்று நியமனம் எம்.எல். ஏ.,க்கள் நீங்கலாக) உள்ளனர். இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களில் 6 பேரில் திருபுவனை (தனி) தொகுதி அங்காளன், உழவர்கரை தொகுதி
பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., திடீர் உண்ணாவிரதம்: முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

புதுச்சேரி-தனது தொகுதியை முதல்வர் புறக்கணிப்பாதாக கூறி சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் ஆதரவாளர்களுடன் சட்டசபை வளாகத்தில் திடீரென உண்ணாவிரத போராட்டத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி சட்டசபையில் 30 எம்.எல்.ஏ.,க்கள் (மூன்று நியமனம் எம்.எல். ஏ.,க்கள் நீங்கலாக) உள்ளனர். இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களில் 6 பேரில் திருபுவனை (தனி) தொகுதி அங்காளன், உழவர்கரை தொகுதி சிவசங்கர், ஏனாம் தொகுதி கொல்லப்பள்ளி சீனுவாச அசோக் ஆகியோர் பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இவர்களில் அங்காளன் எம்.எல்.ஏ., ஏற்கனவே என்.ஆர். காங்., ஆட்சியில் அமைச்சராக இருந்த வர். கடந்த தேர்தலில் அக்கட்சியில் சீட் தராததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில், பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ., அங்காளன், 'எனது தொகுதியில் அடிப்படை வசதி உள்ளிட்ட எந்த வேலையும் செய்து தரக்கூடாது என அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி மறைமுகமாக உத்தரவிட்டுள்ளார்' எனக்கூறி, நேற்று காலை 9:30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை வளாக படிக்கட்டில் ஆதரவாளர்களுடன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். சட்டசபை எதிரே அவரது ஆதரவாளர்கள், திருபுவனை தொகுதியை புறக்கணிக்காதே என்ற பதாகையுடன் நின்றுக் கொண்டிருந்தனர்.பா.ஜ., - தி.மு.க., ஆதரவு


அப்போது, சட்டசபைக்கு வந்த பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், அங்காளன் எம்.எல்.ஏ.,விற்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் அங்காளன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.


சபாநாயகர் சமரசம்


அப்போது, அங்கு வந்த சட்டசபை செயலர் முனிசாமியிடம், அங்காளனை அழைத்துச் சென்று சபாநாயகரிடம் பேச்சுவார்தை நடத்தி சுமுக தீர்வு காணுமாறு சிவா எம்.எல்.ஏ., கூறினார்.அதனைத் தொடர்ந்து சட்டசபை செயலர் முனிசாமி, அங்காளனை, சபாநாயகர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சபாநாயகர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அங்காளன் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார்.


கவர்னருடன் சந்திப்பு


மதியம் 1.45 மணிக்கு சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் மீண்டும் அங்காளன் எம்.எம்.ஏ., வை சபாநாயகர் அறைக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் பகல் 2.15 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.அங்கு, கவர்னர் தமிழிசையிடம், அங்காளன் எம்.எல்.ஏ., 'நான் பா.ஜ., விற்கு ஆதரவு கொடுத்தேன் என்பதற்காக முதல்வர் எனது தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடக்காமல் புறக்கணித்து வருகிறார். என்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் சொல்வதை செய்து வருகிறார். கோவில் கமிட்டி மற்றும் பால் சொசைட்டி கமிட்டிகளை எம்.எல்.ஏ.,வான என்னை ஆலோசிக்காமல், என்னிடம் தோல்வியுற்றவர் கூறும் நபர்களை நியமித்து வருகிறார்' என குற்றம் சாட்டினார்.


கவர்னர் ஆலோசனை


அதனைத் தொடர்ந்து கவர்னர், அங்காளனை வெளியே அனுப்பிவிட்டு, சபாநாயாகர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்காளனை அழைத்த கவர்னர், பிரச்னை தொடர்பாக சபாநாயகர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் கூறியுள்ளேன். அவர்கள் உங்களுடன் பேசுவர் எனக் கூறி அனுப்பினார்.அதன்பேரில், மாலை 3:15 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த அங்காளன் மீண்டும் சட்டசபையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.


நமச்சிவாயம் உறுதி


மாலை 3:30 மணிக்கு சட்டசபைக்கு வந்த அமைச்சர் நமச்சிவாயம், பிரச்னையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.அதனையேற்று அங்காளன் எம்.எல்.ஏ., உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கூறினார். அமைச்சர் நமச்சிவாயம், பழச்சாறு கொடுத்து அங்காளன் எம்.எல்.ஏ.,வின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.ஆளும் கட்சியின் ஆதரவு எம்.எல்.ஏ., முதல்வரை கண்டித்து சட்டசபையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சம்பவம் ஆளும் கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X