நோய் கொடுமையால்முதியவர் தற்கொலை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கடலுார்-நெஞ்சு வலியால் அவதிப் பட்ட முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் அடுத்த குடிகாடு சிப்காட் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி, 68; கட லுார் இந்திய உணவுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்ததால், ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும் அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டதால் மன உளைச்சலில்



கடலுார்-நெஞ்சு வலியால் அவதிப் பட்ட முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் அடுத்த குடிகாடு சிப்காட் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி, 68; கட லுார் இந்திய உணவுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்ததால், ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும் அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்தார்.நேற்று முன்தினம் இரவு மீண்டும் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த தண்டபாணி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு, சிப்காட் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார்.அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X