டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து கடலூரில் போராட்டம் அறிவிப்பு| Dinamalar

'டாஸ்மாக்' நிர்வாகத்தை கண்டித்து கடலூரில் போராட்டம் அறிவிப்பு

Added : செப் 24, 2022 | |
கடலுார்-கடலுாரில், டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து, வரும் 11ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:கடலுார் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் குளறுபடிகள் அதிகமாக நடந்து வருகிறது. பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் அளிக்க வேண்டும் என விதி உள்ளது.



கடலுார்-கடலுாரில், டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து, வரும் 11ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:கடலுார் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் குளறுபடிகள் அதிகமாக நடந்து வருகிறது. பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் அளிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால், பணம் கொடுத்தால் மட்டுமே இடமாறுதல் என்ற நிலையில் நிர்வாகம் உள்ளது.அதிகமாக விற்பனை நடைபெறும் கடையில் கூடுதல் பணியாளர் நியமிக்கும் நடைமுறையை கடைபிடிக்காமல், குறைவாக விற்பனையாகும் கடைக்கு அதிக விற்பனையாளர்கள் பணி நிரவல் செய்யப்படுகின்றனர்.நிர்வாகத்தில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 16 டாஸ்மாக் பணியாளர்கள் குற்றச் செயலுக்காக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் முறைகேடு நடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அப்போதைய டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய மேலாளர் நியமனம் செய்யப்பட்டும், 16 பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தின் தலையீடு டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிகமாக உள்ளதாக குற்றம்சாட்டிய நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால், மீண்டும் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சென்று விட்டது. சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் மீதான பணியிடை நீக்க விசாரணை முடிந்தும் ஓராண்டாக பணி வழங்கப்படவில்லை.எனவே, இதுபோன்ற மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து, வரும் அக்டோபர் 11ம் தேதி, கடலுாரில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.சங்க மாவட்ட தலைவர் அல்லிமுத்து, செயலாளர் பாலமுருகன் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X