'அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்தி விட்டனர்'

Added : செப் 24, 2022 | |
Advertisement
நடுவீரப்பட்டு-நடுவீரப்பட்டில், கடலுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷ்யம், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், குறிஞ்சிப்பாடி செயலாளர் ஆனந்தபாஸ்கர், வடலுார் நகர செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கடலுார் தெற்கு
'அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்தி விட்டனர்'



நடுவீரப்பட்டு-நடுவீரப்பட்டில், கடலுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷ்யம், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், குறிஞ்சிப்பாடி செயலாளர் ஆனந்தபாஸ்கர், வடலுார் நகர செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துதரப்பு மக்களுக்கு என 33 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.தற்போதுள்ள அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத அரசாகும். மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினர். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை தரவில்லை.கருவுற்ற தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் முதல், திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வரை பல நல்ல திட்டங்களை அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. மேலும், மகளிருக்கு ஸ்கூட்டி உள்ளிட்ட நல்ல திட்டங்கள் பலவற்றை வழங்கினோம். ஆனால், இந்த ஆட்சி அனைத்தையும் நிறுத்தி விட்டது.விவசாயிகளின் விடிவெள்ளியாக இருந்தது அ.தி.மு.க., ஆட்சி. இந்த ஆட்சி எப்போது மாறும் என தி.மு.க.,வை சேர்ந்தவர்களே கேட்கின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் சிவசுப்ரமணியன், மாநில தொழிற்சங்க இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் இன்பராஜ், மாவட்ட கவுன்சிலர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குமளங்குளம் ஒன்றிய கவுன்சிலர் குருநாதன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X