பிரதோஷ நாட்களில் மட்டும் குடிநீர்மற்ற நாட்களில் காலி தொட்டி குடிநீருக்கு வழியின்றி அல்லாடும் பக்தர்கள், குரங்குகள்| Dinamalar

பிரதோஷ நாட்களில் மட்டும் குடிநீர்மற்ற நாட்களில் காலி தொட்டி குடிநீருக்கு வழியின்றி அல்லாடும் பக்தர்கள், குரங்குகள்

Added : செப் 24, 2022 | |
விருதுநகர் : வத்திராயிருப்பு தாணிப்பாறை சதுரகிரி மலைக்கு செல்லும் அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இன்று நடக்கும் பிரதோஷ நாட்கள் போன்ற நாட்களில் மட்டுமே குடிநீர் நிரப்பி பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் காலி தொட்டியாக இருப்பதால் குடிநீருக்காக குரங்குகள், பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.மதுரை சேடப்பட்டி ஒன்றியம், சாப்டூர் ஊராட்சி சார்பில்
பிரதோஷ நாட்களில் மட்டும் குடிநீர்மற்ற நாட்களில் காலி தொட்டி குடிநீருக்கு வழியின்றி அல்லாடும் பக்தர்கள், குரங்குகள்

விருதுநகர் : வத்திராயிருப்பு தாணிப்பாறை சதுரகிரி மலைக்கு செல்லும் அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இன்று நடக்கும் பிரதோஷ நாட்கள் போன்ற நாட்களில் மட்டுமே குடிநீர் நிரப்பி பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் காலி தொட்டியாக இருப்பதால் குடிநீருக்காக குரங்குகள், பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

மதுரை சேடப்பட்டி ஒன்றியம், சாப்டூர் ஊராட்சி சார்பில் தாணிப்பாறை வாசலில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் பிரதோஷ நாட்கள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே குடிநீர் நிரப்பப்படுகிறது. மற்ற நாட்களில் நிரப்பபப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இப்பகுதியில் எப்போதும் வனவிலங்குகளில் ஒன்றான குரங்குகள் நடமாட்டம் உள்ளது.



சதுரகிரி வழிப்பாதைகளில் செல்ல நீர் ஓட்டம் இருந்தாலும், அடிவாரத்தில் இது தான் குடிப்பதற்கு உள்ளது. இதனால் நள்ளியை திறந்து குரங்குகள் அவ்வப்போது குடிநீர் குடிக்கும். அதே போல் சனி, ஞாயிறு ஆனாலே பக்தர்கள் குடும்பத்துடன் வந்து மலையடிவாரத்தில் தேங்காய் உடைத்து மொட்டை அடித்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதமாக இத்தொட்டியில் குடிநீர் நிரப்புவது கிடையாது.



பிரதோஷம் வந்தால் அந்த நான்கு நாட்களுக்கு மட்டும் நிரப்பப்படும். நேற்று வரை குடிநீர் நிரப்பப்படவில்லை. இதனால் குரங்குகள் குடிநீருக்காக அங்குமிங்கும் அலைந்தன.இன்று பக்தர்கள் வருவதால் இன்று குடிநீர் நிரப்பப்பட்டாலும் மீண்டும் நிரப்பபடாமல் விட வாய்ப்புள்ளது. வனத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து முறையாக குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பக்தர் மகேஷ்: குடிநீர் இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம். பிரதோஷ நாட்களை போல மற்ற நாட்களிலும் முன்பு போலவே குடிநீர் நிரப்ப வேண்டும். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X