அருப்புக்கோட்டை இளைஞர் மர்ம மரணம்; 9 நாட்களுக்கு பிறகு உடல் அடக்கம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தங்கபாண்டியன்,30 மர்மம் மரணம் அடைந்த வழக்கில், 9 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டியன், 30, ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்தார். மனநிலை சரியில்லாதவர் என கூறியதால் அவரை மன நல காப்பகத்தில் சேர்க்க போலீசார் அறிவுரை கூறினார்.

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தங்கபாண்டியன்,30 மர்மம் மரணம் அடைந்த வழக்கில், 9 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.





அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டியன், 30, ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்தார். மனநிலை சரியில்லாதவர் என கூறியதால் அவரை மன நல காப்பகத்தில் சேர்க்க போலீசார் அறிவுரை கூறினார். அங்கு அனுமதித்த நிலையில் மீண்டும் மீண்டும் போலீசார் அழைத்து சென்ற போது, மரணம் அடைந்தார். இது குறித்து அவரது மனைவி கோகிலா , குடும்பத்தார் தங்கபாண்டியன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மறியல் செய்தனர். உடலை உடற்கூறு செய்வதற்கு அனுமதிக்கவில்லை.




பின் நீதிபதி முத்து இசக்கி தலைமையில் விருதுநகரில் அரசு ஆஸ்பத்திரியில் உடற்கூறு செய்ய ஒத்துக்கொண்டனர். உடற்கூறு செய்த பின் உடலை வாங்க மறுத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு தெரிவிக்கப்பட்டது. செப்.22ல், நீதிபதி, உடலை மனுதாரர் பெற வேண்டும்.




தவறும் பட்சத்தில் விதிகளை பின்பற்றி உரிய முறையில் இறுதிச் சடங்கு மேற்கொள்ள போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டதையடுத்து, நேற்று தங்கபாண்டியன் தங்கை தந்தை தங்கமாரி, மனைவி கோகிலா, குடும்பத்தினர் விருதுநகர் அரசு மருத்துவமனைவிக்கு சென்று தங்கபாண்டியன் உடலை பெற்று, செம்பட்டிக்கு சென்று ஊராட்சி மயானத்தில் மதியம் 12:30 மணிக்கு அடக்கம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X