நீடித்த வளர்ச்சி குறித்த மண்டல கருத்தரங்கம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கு நடந்தது.கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார். திட்டம், வளர்ச்சித்துறை அரசு சிறப்பு செயலாளர் ஹர் சஹாய் மீனா தலைமை வகித்து பேசியதாவது: பொருளாதார வளர்ச்சி, சமுக நிலைத்தன்மை, சுற்றுப்புற

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கு நடந்தது.

கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார். திட்டம், வளர்ச்சித்துறை அரசு சிறப்பு செயலாளர் ஹர் சஹாய் மீனா தலைமை வகித்து பேசியதாவது: பொருளாதார வளர்ச்சி, சமுக நிலைத்தன்மை, சுற்றுப்புற பாதுகாப்பு ஆகிய 3 குறிக்கோள்களை சாதிப்பதே நீடித்த நிலையான வளர்ச்சியின் முக்கிய நோக்கம். இதன் படி 17 இலக்குகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்கல் செய்வதன் மூலம் தமிழ்நாட்டை இந்திய தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற்ற முடியும்.

மக்கள் பிரதிநிதிகள், அரசு சாரா தொண்டு நிறுவுனங்கள், தன்னார்வலர்கள், அரசு துறைகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் முன்னேற விழைகிற மாவட்டங்களின் பட்டியலில் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே வளர்ச்சி குறியீடுகளை அடைவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே மற்ற மாவட்டங்களும் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களை பின்பற்றி நீடித்த நிலையான இலக்குகளை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும், என்றார். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், மாநில ஆலோசகர் சுஜாதா, 5 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X