'ஓய்வு' சர்க்கரை ஆலை பணியாளர் வீட்டில் 50 பவுன் நகைகள் திருட்டு

Added : செப் 24, 2022 | |
Advertisement
பள்ளிபாளையம் : தாஜ்நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பணியாளர், சிகிச்சைக்கு சென்ற இருந்த நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து, 50 பவுன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிபாளையம் அருகே தாஜ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர். 67. இவர் தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பார்வதி, 55. தம்பதியரின் மகன் அமெரிக்காவில் உள்ளார். மகள்


பள்ளிபாளையம் : தாஜ்நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பணியாளர், சிகிச்சைக்கு சென்ற இருந்த நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து, 50 பவுன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளிபாளையம் அருகே தாஜ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர். 67. இவர் தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பார்வதி, 55. தம்பதியரின் மகன் அமெரிக்காவில் உள்ளார். மகள் திருமணமாகி கோவையில் உள்ளார். இதனால் கணவன், மனைவி தனியே வசிக்கின்றனர்.

கடந்த, 14ம் தேதி, சந்திரசேகரும், பார்வதியும் சிகிச்சைக்கு கோவைக்கு சென்று விட்டு, நேற்று காலை வந்தார். அப்போது வீட்டின் பின்கதவு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த, 50 பவுன் நகை திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சந்திரசேகர் பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X