'குளம் நிரம்பியதால் பயிர்கள் நாசம்'

Added : செப் 24, 2022 | |
Advertisement
சேந்தமங்கலம் : கொல்லிமலை பகுதியில், கடந்த, 2 மாதங்கள் தொடர்ந்து மழை பெய்ததால், கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி, பெரியகுளம், சின்னகுளம், கருவாட்டாறு, பொம்மசமுத்திரம் ஏரி உள்ளிட்ட குளம், ஏரிகள் நிரம்பின. அவற்றின் உபரி நீர் வெளியேறியதால், பொன்னார் குளம் நிரம்பியது. 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொன்னார் குளத்தை சுற்றியுள்ள, 30 ஏக்கர் விவசய நிலத்தில் பயிரிட்டுள்ள பருத்தி, சோளம்,



சேந்தமங்கலம் : கொல்லிமலை பகுதியில், கடந்த, 2 மாதங்கள் தொடர்ந்து மழை பெய்ததால், கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி, பெரியகுளம், சின்னகுளம், கருவாட்டாறு, பொம்மசமுத்திரம் ஏரி உள்ளிட்ட குளம், ஏரிகள் நிரம்பின.
அவற்றின் உபரி நீர் வெளியேறியதால், பொன்னார் குளம் நிரம்பியது. 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொன்னார் குளத்தை சுற்றியுள்ள, 30 ஏக்கர் விவசய நிலத்தில் பயிரிட்டுள்ள பருத்தி, சோளம், மரவள்ளி கிழங்கு, தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர்கள், நீரில் மூழ்கி நாசமாதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது பொன்னார் குளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறாமல், அதன் மதகை அடைத்து வைத்துள்ளதால், பயிர்கள் அழுகி நாசமாகி வருகிறது. இதனால் பொன்னார் குளத்தின் மதகை திறந்துவிட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மதகை திறந்து விடாமல் அடைத்துள்ளதால் புதிதாக கட்டப்பட்ட மதகு, ஏரியின் கரைக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X