'கோவில் நிலங்களில் பனை விதைகள் நடவு'

Added : செப் 24, 2022 | |
Advertisement
மல்லசமுத்திரம் :கூத்தாநத்தம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில், 2,500 பனை விதைகள் நடப்பட்டன. பசுமை நாமக்கல் மற்றும் கலைஞர் தல மரக்கன்றுகள் திட்டத்தின் மூலம், நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கோவில் நிலங்களில் பனை, இலுப்பை, வேங்கை உள்ளிட்ட, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.


மல்லசமுத்திரம் :கூத்தாநத்தம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில், 2,500 பனை விதைகள் நடப்பட்டன.


பசுமை நாமக்கல் மற்றும் கலைஞர் தல மரக்கன்றுகள் திட்டத்தின் மூலம், நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கோவில் நிலங்களில் பனை, இலுப்பை, வேங்கை உள்ளிட்ட, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.

அதன்படி, நேற்று, மல்லசமுத்திரம் அருகே உள்ள கூத்தாநத்தம் கிராமம், அத்தனுார் அம்மன் கோவில், உப்புக்கல் கரடு கரியபெருமாள் கோவில் மற்றும் கருமாபுரம் அத்தனுாரம்மன் கோவில் ஆகியவைகளுக்கு சொந்தமான நிலங்களில், நேற்று, 2,500 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலையத்துறை குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமை வகித்தார்.


காளிப்பட்டி கந்தசாமி கோவில் செயல் அலுவலர் மணிகண்டன், கூத்தாநத்தம் பஞ்., தலைவர் சம்பூரணம், கோவில் நடைமுறை நிர்வாகி தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X