* பிரச்சனையும், தீர்வும்

Added : செப் 24, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையில், பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை, சீரிய நிர்வாகத்தினால், மருத்துவமனை தேசிய தரச் சான்று, காயகல்ப், என்.ஏ.பிஹெச்., உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது.
* பிரச்சனையும், தீர்வும்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையில், பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை, சீரிய நிர்வாகத்தினால், மருத்துவமனை தேசிய தரச் சான்று, காயகல்ப், என்.ஏ.பிஹெச்., உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை மட்டுமல்லாமல் திருச்சுழி, பந்தல்குடி, நரிக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். இங்கு உள்ள பிரசவ வார்டில் உயர்தர சிகிச்சையும், சுக பிரசவம் செய்வதால் ராசியான மருத்துவமனை என, வெளி மாவட்டங்களில் இருந்தும் பிரசவத்திற்கு பெண்கள் இங்கு வருகின்றனர்.பொதுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, குழந்தைகளுக்கு என 24 மணி நேர சிகிச்சை, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உட்பட பல பிரிவுகள் இங்கு உள்ளன. 294 படுக்கை வசதிகள் கொண்டது.

டயாலிசிஸ், சிடி ஸ்கேன்' டிஜிட்டல் எக்ஸ்ரே உட்பட வசதிகள் உள்ளன.இத்தனை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும், போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை. பிரசவ வார்டிற்கு கூடுதலான டாக்டர்கள் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்பட கூடிய வகையில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும்.

எக்ஸ் ரே, சிடி ஸ்கேனில் தொழில்நுட்ப பணியாளர்கள் கூடுதலாக தேவை. 24 மணி நேரமும் செயல்படக் கூடியதாக இந்த பிரிவுகள் இயங்க வேண்டும். இரவு நேர பணியில்டாக்டர்கள் இருக்க வேண்டும். மருத்துவ மனையில் உள்ள பிணவறை கட்டடம் பல ஆண்டுகளாக இடியும் நிலையில் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை விருதுநகருக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கின்றனர்.



கூடுதல் டாக்டர்கள் வேண்டும்


பூங்கோதை, குடும்ப தலைவி: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு நிகரான சிகிச்சை செய்யப்படுகிறது. மருத்துவமனை சுத்தமாக உள்ளது. ஆனால் கூடுதலான மருத்துவர்கள் இல்லை. குறிப்பாக மகப்பேறு பிரிவுக்கு அதிக அளவில் கூட்டம் இருப்பதால் இங்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதேபோன்று துப்புரவு பணிக்கு போதுமான பணியாளர்கள் இல்லை இவர்களும் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.


தொழில்நுட்ப பணியாளர்கள் வேண்டும்


ஜெயராஜ், அருப்புக்கோட்டை: அரசு மருத்துவமனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்யப்பட வேண்டும். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே என பல பிரிவுகள் இருந்தாலும், இவற்றில் போதுமான தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை. கூடுதல் பணியாளர்களை அமர்த்தி 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர பணியில் மனநல மருத்துவர் பணியில் அமர்த்த கூடாது. மார்ச்சுவரி கட்டிடம் புதியதாக கட்ட வேண்டும்.


தீர்வு


அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ஏற்ப டாக்டர்கள் ,துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சேதமடைந்த பிணவறை கட்டடத்தை இடித்து புதிதாக கட்டடம் கட்ட வேண்டும். தேவையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாவட்ட மருத்துவமனை என்ற அறிவிப்போடு நின்று விடாமல் அதற்கு தேவையான டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X