கரும்பு காட்டில் பதுங்கிய காட்டெருமை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை| Dinamalar

கரும்பு காட்டில் பதுங்கிய காட்டெருமை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

Added : செப் 24, 2022 | |
பள்ளிபாளையம் : குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் சில நாட்களாக தண்ணி காட்டிய காட்டெருமை, பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி கரும்பு காட்டில் இருந்தபோது, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக காட்டெருமை உலா வருவதை பொதுமக்கள் பார்த்து விட்டு, தீயணைப்புப்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சேலம், நாமக்கல்,


பள்ளிபாளையம் : குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் சில நாட்களாக தண்ணி காட்டிய காட்டெருமை, பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி கரும்பு காட்டில் இருந்தபோது, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக காட்டெருமை உலா வருவதை பொதுமக்கள் பார்த்து விட்டு, தீயணைப்புப்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும்
ஊழியர்கள், ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், 60க்கு மேற்பட்டோர், பொதுமக்கள் காட்டெருமையை பார்த்ததாக கூறிய இடங்களில், இரவு, பகலாக தேடி வந்தனர். இந்நிலையில், பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி ஆற்றோரத்தில் உள்ள கரும்பு காட்டில், காட்டெருமை உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், காட்டெருமை மீது மயக்க ஊசி செலுத்தி, அதை பிடித்தனர். இதனால் குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வனச்சரக அலுவலர் பெருமாள் கூறியதாவது:

சமயசங்கிலி பகுதியில் காட்டெருமை உள்ளதாக தகவல் வந்தது. அங்கு சென்று, கரும்பு காடு முழுவதும் தேடிய போது, தடுப்பணை அருகே கரும்புக்காட்டில் பதுக்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, சிறப்பு டாக்டர் மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டு, அதிகாலை, 3:00 மணிக்கு காட்டெருமை பிடிக்கப்பட்டது. பின் வாகனத்தில் ஏற்றிச் சென்று, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியில் விடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X