ஆக்கிரமிப்பு அகற்றும் பணி; புவனகிரியில் ஒத்திவைப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
புவனகிரி-புவனகிரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.புவனகிரி பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைக்குட்பட்ட இடங்களில் தனிநபர்கள் சிலர் ஆக்கிமிப்பு செய்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 24ம் தேதிக்குள்(இன்று) ஆக்கிரமிப்புகளை



புவனகிரி-புவனகிரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.புவனகிரி பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைக்குட்பட்ட இடங்களில் தனிநபர்கள் சிலர் ஆக்கிமிப்பு செய்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 24ம் தேதிக்குள்(இன்று) ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.இதற்கிடையில், வர்த்தக சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன், செயலர் ரத்தினசுப்ரமணியன், பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், 'பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளதால், தீபாவளிக்கு பின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என, வேளாண் அமைச்சர், கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், இன்று 24ம் தேதி நடக்க இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X