சேந்தமங்கலம் யூனியன் கூட்டம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்| Dinamalar

சேந்தமங்கலம் யூனியன் கூட்டம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Added : செப் 24, 2022 | |
சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் யூனியன் கூட்டத்தில், காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட, 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சேந்தமங்கலம் யூனியன் குழுக்கூட்டம் நேற்று, யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சேர்மன் மணிமாலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கீதா, பி.டி.ஓக்கள்., ரவிச்சந்திரன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,



சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் யூனியன் கூட்டத்தில், காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட, 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சேந்தமங்கலம் யூனியன் குழுக்கூட்டம் நேற்று, யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சேர்மன் மணிமாலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கீதா, பி.டி.ஓக்கள்., ரவிச்சந்திரன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட பஞ்., பகுதிகளில் உள்ள, அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி கட்டடங்களை பராமரிப்பு செய்வது, மழை காலத்தில் பழுதடைந்துள்ள பள்ளிகளின் கட்டடங்களை ஆய்வு செய்து, உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்பது, பள்ளிகளின் மேற்கூரை, சுற்றுச்சுவர்கள், கழிப்பிடம், சத்துணவு சமையலறை ஆகியவற்றில் பாதிப்பு இருந்தால், உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுப்பது, சேந்தமங்கலம் யூனியன் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க, யூனியன் நிர்வாகம் உடனடியாக, கழிவுநீர் வாய்க்கால்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க உடனடியாக சரி செய்தல் உள்பட, 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதில் யூனியன் கவுன்சிலர்கள், பெரியசாமி, சண்முகம், சுபாஷினி, சரசு, கோகிலா, பணி மேற்பார்வையாளர் சரவணன், குமார், சாலை ஆய்வாள ஹரிபாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X