'ஓவர் லோடு' மணல் லாரிகள்; விபரம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை : அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து சென்றதாக, எத்தனை லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, தமிழக அரசு விபரங்கள் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராஜாமணி என்பவர் தாக்கல் செய்த மனு:மணல், ஜல்லி கற்களை, லாரிகளில் அதிக அளவில் எடுத்து செல்கின்றனர். லாரிகளில் உள்ள சரியான அளவுக்கு,
Sand Lorry, Quarry, Chennai High Court, மணல் லாரி, ஐகோர்ட், குவாரி, சென்னை உயர் நீதிமன்றம் , Over Load, High Court, ஓவர் லோடு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து சென்றதாக, எத்தனை லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, தமிழக அரசு விபரங்கள் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராஜாமணி என்பவர் தாக்கல் செய்த மனு:மணல், ஜல்லி கற்களை, லாரிகளில் அதிக அளவில் எடுத்து செல்கின்றனர்.லாரிகளில் உள்ள சரியான அளவுக்கு, போக்குவரத்து 'பெர்மிட்' கொடுப்பது இல்லை. சரியான எடைக்கான, 'பாஸ்' வழங்காமல், அதிக அளவில் எடுத்து செல்லும்படி லாரி உரிமையாளர்களை, குவாரி உரிமையாளர்கள் வற்புறுத்துகின்றனர். இதனால், லாரிகளை போலீசார் முடக்குகின்றனர். அவர்களுக்கு பணம் கொடுத்த பின்னரே விடுவிக்கின்றனர்.latest tamil newsசட்டவிரோத குவாரிகளால், அரசுக்கு ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்களுக்கு எதிராக மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதிகாரிகள், குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படுவது இல்லை.எனவே, லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல், ஜல்லி கற்கள் எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும்.அதிகாரிகள், குவாரி உரிமையாளர்கள், போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அளவுக்கு அதிகமாக மணல், ஜல்லி ஏற்றிச் சென்றதாக, எத்தனை லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களை அளிக்க, தமிழக அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202210:01:33 IST Report Abuse
அநாமதேயம் ஒரு லாரிக்கு எவ்வளவு மணல் பில் போடுகிறார்கள் உண்மையில் அவ்வளவுதான் ஏற்றுகிறார்களா குவாரிகளில் என்பதை கண்காணிப்பை விட்டு லாரிகளின் முதலாளி மற்றும் டிரைவர்கள் மேல் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவது சரியா கணம் நீதிபதிகள். இதை தடுக்க வேண்டும் என்றால் லாரியை எடைபோட்டு அல்லது மணல் கொள்ளளவை இத்தனை கன அடி என்று சான்றிதழ் கொடுத்து குவாரிகளில் நடைபெறும் கொள்ளை தவிர்க்க வேண்டும். இதிலும் குறுக்கு வழி உண்டு ஏமாற்ற.அதைஇங்கே சொல்லி தெரியாதவர்களும் செய்ய விரும்பவில்லை
Rate this:
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
24-செப்-202209:52:48 IST Report Abuse
Rangarajan Pg ""இதோ மீ லார்ட், நீங்கள் கேட்ட அணைத்து விபரங்களையும் கூடிய விரைவில் எடுத்து தருகிறோம்"" என்று திமுகவினர் நீதிமன்றத்தில் நேரம் பெற்று விவரங்களை திரட்டும் பணியில் ஐந்து பேர் கொண்ட குழுவை எப்போதோ ஆரம்பித்து அவர்களும் விவரங்கள் திரட்டும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்று கேள்வி.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
24-செப்-202208:30:22 IST Report Abuse
mindum vasantham மணல் contract எல்லாம் ஒவ்வொரு ஜாதியில் இருக்கும் ரௌடியைகளுக்கே கிடைக்கிறது தரமான ஆளுக்கு கிடைக்கிறதா இது தான் திராவிடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X