உளவுத்துறை உதவி கமிஷனர் மாற்றம்; கோவையில் போலீசார் குவிப்பு

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
கோவை: கோவையில் 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே உளவுத்துறை உதவி கமிஷனர் முருகவேல் இடமாற்றம் செய்யப்பட்டார்.கோவை மாநகரில் கடந்த 3 நாட்களில் காந்திபுரம், ஒப்பணகார வீதி உள்ளிட்ட 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், மாநகரில் பெரும் பதற்றம்
Coimbatore, Police, kerosene bomb, கெரசின் குண்டு,  உளவுத்துறை, கோவை, கோயமுத்தூர், intelligence, போலீஸ்,

கோவை: கோவையில் 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே உளவுத்துறை உதவி கமிஷனர் முருகவேல் இடமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை மாநகரில் கடந்த 3 நாட்களில் காந்திபுரம், ஒப்பணகார வீதி உள்ளிட்ட 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், மாநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.latest tamil news


மாநகர போலீசார் 2 ஆயிரம் பேர், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 1,500 பேர், அதிவிரைவுப்படையினர் 400 பேர், கமாண்டோ படையினர் 100 பேர் என மாநகரத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.கோவையில், பாதுகாப்பு பணிகளை, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன், மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் மேற்பார்வையிட்டனர்.latest tamil newsஇந்நிலையில், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், பார்த்திபன் நியமிக்கப்படுவதாக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.latest tamil news
தலைமை செயலர் ஆலோசனைகோவையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமை செயலர் இறையன்புவுடன், கோவை கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரிநாராயணன், மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆலோசித்தனர்.

அதன்பின், கலெக்டர் சமீரன் கூறுகையில், "போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மக்கள் அச்சப்பட்ட தேவையில்லை. தவறு செய்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Wilson Nesamony - Mumbai,இந்தியா
24-செப்-202218:58:43 IST Report Abuse
Wilson Nesamony சட்டத்தின் ஆட்சி நடைபெற வில்லை. தமிழக அரசு கலைக்கப்பட வேண்டிய அரசு.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-செப்-202201:10:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது...
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
24-செப்-202218:35:23 IST Report Abuse
a natanasabapathy Kannai moodikkondu vottukkaakavum panaththukkaakavum ivankalai aatharikkum arasiyal katchikale vanmuraikku kaaranam .innoru afganisthan pola thamizhakathaiyum maarri viduvaarkal.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
24-செப்-202217:32:11 IST Report Abuse
sankaranarayanan இங்கே குண்டு கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. எப்போது அடங்குமோ. மக்கள் விழிப்புடன் எப்போதுமே இருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X