சொகுசு படகில் இந்தியாவின் நீண்ட நதிப் பயணத்திற்கு தயாராகுங்கள்!

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
இந்தியாவின் மிக நீளமான நதிப் படகு சேவை அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியிலிருந்து அசாமின் போகிபீல் வரையிலான 4 ஆயிரம் கிமீ தூரம் பயணிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ளது. இது கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளையும், வங்கதேச புரோட்டோகால் பாதையையும் இணைத்து செல்லும். இந்தியாவில் நதிகள் வழியாக க்ரூஸ் எனும் சொகுசு படகில் பயணிக்கும் வசதி குறைவான இடங்களிலேயே
River Cruise, Gati Sakthi, Bogi beel, கதி சக்தி, கங்கை, பிரம்மபுத்திரா , சுற்றுலா, போகிபீல், வாரணாசி, Kathi Shakti, Ganga, Brahmaputra, Tourism, Varanasi,

இந்தியாவின் மிக நீளமான நதிப் படகு சேவை அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியிலிருந்து அசாமின் போகிபீல் வரையிலான 4 ஆயிரம் கிமீ தூரம் பயணிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ளது. இது கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளையும், வங்கதேச புரோட்டோகால் பாதையையும் இணைத்து செல்லும்.

இந்தியாவில் நதிகள் வழியாக க்ரூஸ் எனும் சொகுசு படகில் பயணிக்கும் வசதி குறைவான இடங்களிலேயே உள்ளது. உ.பி.,யில் கங்கை நதி, அசாமில் பிரம்மபுத்திரா நதி மற்றும் கேரளாவின் உப்பங்கழிகள் போன்ற இடங்களில் நதி வழியாக பயணம் செய்யலாம். மத்திய அரசின் உட்கட்டமைப்பு திட்டமான கதி சக்தியின் கீழ் உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து திறனை மேம்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. இதன் மூலம் நதி வழி சுற்றுலாவுக்கான இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன.


latest tamil news


இந்நிலையில் வாரணாசி - அசாமின் போகிபீல் இடையேயான நதிப் பயணம் சாத்தியமானால் அது சுற்றுலா வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வடகிழக்கு பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இத்திட்டத்தை 2023 பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன. வாரணாசி - போகிபீல் இடையேயான தூரம் சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர். மத்திய நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. போகிபீல் மற்றும் குஜ்ஜான் நதியில், தரையை போன்றே காணப்படும் பிரம்மாண்ட மிதவைகள் ரூ.8 கோடி செலவில் அமைக்க உள்ளனர். அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது தவிர போகிபீல் ஆற்றங்கரை மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக திறந்த தளம், ஒரு உணவகம், எட்டு பயோ-டாய்லெட்டுகள் மற்றும் ஆறு நிழற்குடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நதிப் பயணம் செயல்பாட்டுக்கு வந்தால் இதை விட அருமையான திரில்லிங்கான பயணம் இருக்க முடியாது. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய இரு நதிகளின் செழுமையை கண்டுகளித்தப்படி பல்வேறு நகரங்களை நதியிலிருந்தபடி கண்டு ரசிக்கலாம். இது செயல்பாட்டுக்கு வரும், வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் தேர்வாக இந்த நதிப் படகு பயணம் இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samy - tamilnadu,பிரான்ஸ்
25-செப்-202201:09:57 IST Report Abuse
samy வணக்கம், 4000km நீர் வழி பாதை, 1200km தரை வழி பாதை.
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
24-செப்-202220:14:00 IST Report Abuse
kijan அதற்குமுன் கங்கையை சுத்தப்படுத்த வேண்டும்.... இல்லையெனில் மிதக்கும் டெட் பாடிகளை கண்டு களித்தபடி செல்லலாம் .... அமேசான் prime ஓடிடி தளத்தில் படகு பயணம் காணக்கிடக்கிறது
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
24-செப்-202217:28:04 IST Report Abuse
sankaranarayanan நமது சென்னையில் பக்கிங்காம் கால்வாயில் - கூவம் கால்வாய்களில் விட்டுப்போன திட்டமான படகு ஓட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும். இந்த ஆட்சியில் எதிர்பார்க்கலாமா? இப்போதுதான் தண்ணீர் முதலைகள் இல்லையே. ஓ ஹோ அரசியல் முதலைகள் இருக்கின்றனவா. அவைகளை சரிபடுத்திவிடலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X