9வது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிப்பு

Added : செப் 24, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
வேலுார்: ஒன்பதாவது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது தாய் பத்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமலிருந்தது. இதனால் தன்னை கவனித்துக் கொள்ள நளினிக்கு பரோல் வழக்கும்படி தமிழக அரசுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கோரிக்கையை
Rajiv Gandhi, Nalini, Parole, நளினி, பரோல், ராஜிவ், ராஜிவ்காந்தி, ராஜிவ் கொலை,ஆயுள் தண்டனை,   Rajiv, Rajiv Murder, Life Sentence,

வேலுார்: ஒன்பதாவது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது தாய் பத்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமலிருந்தது. இதனால் தன்னை கவனித்துக் கொள்ள நளினிக்கு பரோல் வழக்கும்படி தமிழக அரசுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கோரிக்கையை ஏற்கப்பட்டு, கடந்த டிச., 23 ம் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.



இதனால் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாய் பத்மாவுடன் தங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நளினி இன்று (24) சிறைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவரது தாய் பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு ஒன்பதாவது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அக்., 25 ம் தேதி நளினி சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202211:33:06 IST Report Abuse
Nandakumar Naidu. குற்றவாளிக்கு துணை போகும் விளங்காத விடியல் அரசு.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
25-செப்-202206:50:37 IST Report Abuse
சீனி வீடு எடுத்துக்கொடுத்து பார்த்துக்கொள்ளலாம். இன்னும் என்னென்ன கூத்து நடத்துமோ விடியல்.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
25-செப்-202206:28:09 IST Report Abuse
RaajaRaja Cholan அப்படியே விடுதலை பண்ணிடுங்க , கேவலப்பட்ட ராஜாங்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X