அமித் ஷா - பழனிசாமி சந்திப்பில் பரபரப்பு

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சமீபத்தில் அ.தி.முக., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமியும், சில முன்னாள்அமைச்சர்களும் புதுடில்லி வந்திருந்தனர். அவர்கள் மத்திய உள்துறை அமித் ஷாவையும், பிரதமர்நரேந்திர மோடியையும் சந்திப்பர் என சொல்லப்பட்டது. ஆனால் பழனிசாமி குழுவினர் அமித் ஷாவை மட்டும் சந்தித்துவிட்டு, பிரதமரை சந்திக்காமல் சென்னை திரும்பிவிட்டனர் அமித் ஷாவுடன் அரசியல் பேசவில்லை என்றும் பழனிசாமி
 அமித் ஷா , பழனிசாமி, சந்திப்பு,பரபரப்பு

சமீபத்தில் அ.தி.முக., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமியும், சில முன்னாள்

அமைச்சர்களும் புதுடில்லி வந்திருந்தனர். அவர்கள் மத்திய உள்துறை அமித் ஷாவையும்,

பிரதமர்நரேந்திர மோடியையும் சந்திப்பர் என சொல்லப்பட்டது.


ஆனால் பழனிசாமி குழுவினர் அமித் ஷாவை மட்டும் சந்தித்துவிட்டு, பிரதமரை சந்திக்காமல் சென்னை திரும்பிவிட்டனர் அமித் ஷாவுடன் அரசியல் பேசவில்லை என்றும் பழனிசாமி

கூறினார். இந்த சந்திப்பு குறித்து டில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது. பழனிசாமி,- அமித் ஷா சந்திப்பு முடிந்ததும் புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பில் இருந்த ஒருவர் புகைப்படத்தில் இல்லை என்கின்றனர், பா.ஜ.,வினர்.


latest tamil news



அந்த நபர் சீனியர் பா.ஜ., தலைவரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல். இவர் ஏன் இந்த சந்திப்பில் இருந்தார் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. பழனிசாமி குழுவினர் அமித் ஷாவிடம் பேசியதை, பியுஷ் கோயல் ஹிந்தியில் மொழிபெயர்த்தார் என சொல்லப்படுகிறது. 'இந்த வேலையை வேறு யாராவது கூட செய்திருக்கலாமே; எதற்கு சீனியர் அமைச்சர் வர வேண்டும் என்ற கேள்விக்கு பா.ஜ., தரப்பிலிருந்து பதில் இல்லை.


அ.தி.மு.க., ஆட்சியின் போது தமிழக அமைச்சர்கள் எப்போது டில்லி வந்தாலும், கோயலைத் தான் முதலில் சந்திப்பர். பழனிசாமி, -அமித் ஷா சந்திப்பின் போது கோயல் இருந்தது ஏதோ மிகப்பெரிய விஷயம் நடந்துள்ளதை குறிப்பிடுகிறது என, டில்லி அரசியல் வட்டாரங்களில்

பரபரப்பாக பேசப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
25-செப்-202207:06:09 IST Report Abuse
Girija அமித்ஷாவுக்கு ஆங்கிலம் தெரியாதா ?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-செப்-202206:49:12 IST Report Abuse
Mani . V அப்படின்னா ரஷ்யா - உக்ரேன் போர் முடிவுக்கு வந்து விடுமுன்னு சொல்லுங்க.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-செப்-202205:25:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் லோக் ஆயுக்தா ஆடியோ லீக் பத்தி இதிலே ஒண்ணும் இல்லியே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X