தமிழகம் உள்ளிட்ட அரசு இணையதளங்கள் மீது...'சைபர்' தாக்குதல்! வங்கதேசத்தை சேர்ந்த 'ஹேக்கர்'கள் குழு கைவரிசை

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி:தமிழகம், குஜராத், உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளின் 500க்கும் மேற்பட்ட துறை ரீதியான இணையதளங்கள் மற்றும் மத்திய அரசின் இணையதள தகவல்களை சேகரிக்கும் கணினி, 'சர்வர்' ஆகியவற்றை முடக்கும் விதமாக, வங்கதேசத்தைச் சேர்ந்த, 'ஹேக்கர்'கள் எனப்படும் சட்டவிரோத இணைய ஊடுருவல் குழு, 'சைபர்' தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.'பேஸ்புக், டெலிகிராம்'
Government Websites, Cyber Attack, Hacker, தமிழகம் , சைபர், ஹேக்கர், வங்கதேசம்,  Tamil Nadu, Bangladesh,அரசு இணையதளங்கள் ,

புதுடில்லி:தமிழகம், குஜராத், உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளின் 500க்கும்
மேற்பட்ட துறை ரீதியான இணையதளங்கள் மற்றும் மத்திய அரசின் இணையதள
தகவல்களை சேகரிக்கும் கணினி, 'சர்வர்' ஆகியவற்றை முடக்கும் விதமாக,

வங்கதேசத்தைச் சேர்ந்த, 'ஹேக்கர்'கள் எனப்படும் சட்டவிரோத இணைய ஊடுருவல் குழு, 'சைபர்' தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.


'பேஸ்புக், டெலிகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அடையாளத்தை வெளிப்படுத்தாத நபர் ஒருவர், சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அரசு இணையதளங்கள் மீது, சைபர் தாக்குதல்கள் துவங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.உடனடியாக விழித்துக் கொண்ட சைபர் புலனாய்வுக் குழுவினர், அரசு இணையதளங்களின்பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.'கிளவுட் எஸ்இகே'


அப்போது, குஜராத் முதல்வர் அலுவலக இணையதளம் உட்பட, அந்த மாநிலத்தின் உள்துறை, நிதி, கல்வி, சுகாதாரம், பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதே போல, உத்தர பிரதேச மாநில

அரசின், 20க்கும் மேற்பட்ட துறைகளின் இணையதளங்களும் ஆபத்தில் இருப்பது தெரிய

வந்தது.இந்த தாக்குதலில் இருந்து தமிழகம், பஞ்சாப், அசாம், சத்தீஸ்கர் மாநில அரசு

இணையதளங்களும் தப்பவில்லை என்பதும் தெரிய வந்தது. மத்திய அரசின் கணினி ச

ர்வர்களை முடக்கவும் முயற்சிகள் நடந்துள்ளன.


அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த, 'கம்ப்யூட்டர் ஹேக்கர்'கள் குழுவான,

'மிஸ்டீரியஸ் டீம் பங்களாதேஷ்' என்ற குழுவினர் இந்த சைபர் தாக்குதலில் ஈடுபட்டது

தெரிய வந்தது. இந்த தாக்குதலின் போது தகவல் திருட்டு நடக்கவில்லை. வேறு

கோரிக்கைகளை முன்வைத்து மிரட்டல்கள் விடுக்கப்படவில்லை.நாங்கள் நினைத்தால்,

உங்கள் அரசு இணையதளங்களுக்குள் எளிதாக புகுந்து, என்ன வேண்டுமானாலும் செய்ய

முடியும் என்று எச்சரிக்கவே இந்த சதியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக நிபுணர்கள்

தெரிவித்தனர்.


இது போன்ற தாக்குதல்கள் ஏற்கனவே நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் ஈடுபட்ட தஸ்கின் அகமது என்ற ஹேக்கரை, கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த, 'கிளவுட் எஸ்இகே' என்ற இணையதள புலனாய்வு நிறுவனம் அடையாளம்கண்டுபிடித்துள்ளது.சர்ச்சைக்குள்ளானது


இந்த தாக்குதலில், 20 - 25 வயது வரையுள்ள இளம் பட்டதாரிகள் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது. இவர்கள், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 'ஹேக்டிவிஸ்ட் ஆப் கருடா' என்ற குழுவுடன் ஏற்கனவே இணைந்து பல சைபர்

தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வங்கதேச குழுவினர், அந்நாட்டின்

சிட்டகாங் என்ற இடத்தில் இருந்து செயல்படுவதாகவும், 'பேஸ்புக், டுவிட்டர், டெலிகிராம்' வாயிலாக தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்வதாகவும் பெங்களூரு நிறுவன நிபுணர்கள் தெரிவித்தனர்.


இவர்கள், 'ரேவன் ஸ்டார்ம்' என்ற மென்பொருளை பயன்படுத்தி இந்த சைபர் தாக்குதலில்

ஈடுபடுவதாகவும், இதனால் அரசு இணையதளங்களின் செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகும்என்றும் கூறப்படுகிறது.மேலும், இணையதளங்களின் பாதுகாப்பு மற்றும் தகவல்கள் பறிபோக வாய்ப்புள்ளதாகவும்தெரிகிறது.


latest tamil newsசில பாதுகாப்பு அம்சங்களை செயல் இழக்க செய்வதால், இந்த இணையதளங்கள் எதிர்

காலத்தில் மேலும் பல சைபர் தாக்குதல்களுக்கு மிக எளிதில் இலக்காக கூடும் என்றும்

கூறப்படுகிறது.உத்தர பிரதேச பா.ஜ.,வைச் சேர்ந்த நுபுர் சர்மா, இஸ்லாம் மதம் குறித்து

சமீபத்தில்தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரத்துக்கு பதிலடி தரவே, இந்த சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
25-செப்-202207:03:41 IST Report Abuse
Girija பீஹாரிகள் ATM மிலிருந்த பாஸ் புக் மெஷினை ATM மெஷின் என்று நினைத்து கொள்ளையடித்து தூக்கி சென்று ஏமாந்ததுபோல் உள்ளது இந்த வங்கதேச ஹேக்கர்களின் செயல் . தமிழக அரசின் இணையத்தளங்கள் ஒரு உதவாத குப்பை, ஒருவிதத்தில் அதை முடக்கியதற்கு நன்றி.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-செப்-202206:24:45 IST Report Abuse
Mani . V "ஆக" இதிலிருந்து என்ன தெரிகிறது? "ஆக" தமிழகத்தில் உள்ளவர்களை விட, "ஆக" வங்க தேசத்தினர் புத்திசாலிகள் என்று. "ஆக" இதில் சேகுவாரே குடும்பம் என்று பெருமை வேறு.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
24-செப்-202222:50:51 IST Report Abuse
Barakat Ali நன்றி கெட்டவர்கள் ......... வேறென்ன சொல்ல ............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X