மூடி வைக்கவா கட்டுனாங்க நேதாஜிபுரம் சமுதாயக்கூடம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
கோவை:கணபதி, நேதாஜிபுரத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை வடக்கு சட்டசபை தொகுதியில், அருண்குமார் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, கணபதி, நேதாஜிபுரத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. கழிப்பறை வசதி இல்லாததால், இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு

கோவை:கணபதி, நேதாஜிபுரத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை வடக்கு சட்டசபை தொகுதியில், அருண்குமார் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, கணபதி, நேதாஜிபுரத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. கழிப்பறை வசதி இல்லாததால், இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருக்கிறது. அப்பகுதியில், ஏழை மக்கள் பலர் வசிக்கின்றனர்.

பெருந்தொகை செலவழித்து தனியார் மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த சிரமப்படுகின்றனர். மாநகராட்சி சமுதாய கூடத்துக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


அவர்கள் கூறுகையில், 'நேதாஜிபுரத்தில் கட்டியுள்ள புதிய சமுதாய கூடத்தில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க, தற்போதைய எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன், நிதி ஒதுக்க தயாராக இருக்கிறார். அத்தொகையை பயன்படுத்தி, தேவையான வசதிகள் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X