வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரை அனுப்பானடியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது

மதுரை மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் எம்.எச்.கிருஷ்ணன். ஆர்.எஸ்.எஸ்.,பொறுப்பாளர். சாம்பிராணி தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறார். வீடு, நிறுவனம் அருகருகே உள்ளன. காலி இடத்தில் நிறுவன சரக்கு வாகனம் நின்றிருந்தது.அதன் மீது நேற்று இரவு 7:45 மணிக்கு டூவீலரில் வந்த 2 பேர் 3 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
ஒரு குண்டு வெடித்தது. குண்டு வீசியவர்களை நிறுவன ஊழியர்கள் பிடிக்க முயன்ற போது தப்பினர். வாகனம் லேசாக சேதமடைந்தது. கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸ் துணைக் கமிஷனர் சீனிவாச பெருமாள், உதவி கமிஷனர் சண்முகம், கீரைத்துறை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் விசாரிக்கின்றனர்.