100 சித்து வந்தாலும் பயமில்லை அமைச்சர் கார்ஜோள் பதிலடி

Added : செப் 24, 2022 | |
Advertisement
பாகல்கோட்-''சித்தராமையாவை பார்த்து நாங்கள் அஞ்சவில்லை,'' என நீர்ப் பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் தெரிவித்தார்.பாகல்கோட்டில், நேற்று அவர் கூறியதாவது:தாவணகரேவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி வெற்றி அடைந்ததால், பா.ஜ.,வினருக்கு 'கிலி' ஏற்பட்டதாக, காங்கிரசார் விமர்சிக்கின்றனர். 100 சித்தராமையா வந்தாலும், அஞ்சுவது என்ற
100 சித்து வந்தாலும் பயமில்லை அமைச்சர் கார்ஜோள் பதிலடி



பாகல்கோட்-''சித்தராமையாவை பார்த்து நாங்கள் அஞ்சவில்லை,'' என நீர்ப் பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் தெரிவித்தார்.பாகல்கோட்டில், நேற்று அவர் கூறியதாவது:தாவணகரேவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி வெற்றி அடைந்ததால், பா.ஜ.,வினருக்கு 'கிலி' ஏற்பட்டதாக, காங்கிரசார் விமர்சிக்கின்றனர். 100 சித்தராமையா வந்தாலும், அஞ்சுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.பா.ஜ., ஒரே ஒரு எம்.எல்.ஏ., வைத்திருந்த போதே, நாங்கள் அஞ்சியதில்லை. இப்போது பா.ஜ., உலக அளவில் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. பதவி கனவு காணும் காங்கிரசாருக்கு, சித்தராமோற்சவத்தால் எந்த பயனும் ஏற்படாது.ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் கெம்பண்ணா, 20 ஆண்டுகளில் என்ன பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பதை காண்பிக்கட்டும். தன் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களுடன், புதுடில்லிக்கு வரும்படி அழைத்தும் அவர் செல்லவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X