பேக்கேஜ் டெண்டரால் புலம்பும் ஒப்பந்ததாரர்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'பேக்கேஜ் டெண்டரால்' புலம்பும் ஒப்பந்ததாரர்கள்!

Updated : செப் 25, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (1) | |
''இந்த முறை யாரும் கண்டுக்காததால, ராஜினாமா பண்ணிட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் அந்தோணிசாமி.''சுப்புலட்சுமி ஜெகதீசனையா சொல்றீர்...'' என, பட்டென கேட்டார் குப்பண்ணா.''ஆமா... மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவா, 'டெசோ'ன்னு ஒரு அமைப்பை நடத்தி, அப்பப்ப கூட்டங்கள் நடத்திட்டு இருப்பார்... இந்த கூட்டங்கள்ல, தி.மு.க., துணை பொதுச்
 'பேக்கேஜ் டெண்டரால்' புலம்பும் ஒப்பந்ததாரர்கள்!

''இந்த முறை யாரும் கண்டுக்காததால, ராஜினாமா பண்ணிட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் அந்தோணிசாமி.

''சுப்புலட்சுமி ஜெகதீசனையா சொல்றீர்...'' என, பட்டென கேட்டார் குப்பண்ணா.

''ஆமா... மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவா, 'டெசோ'ன்னு ஒரு அமைப்பை நடத்தி, அப்பப்ப கூட்டங்கள் நடத்திட்டு இருப்பார்... இந்த கூட்டங்கள்ல, தி.மு.க., துணை பொதுச் செயலரா இருந்த சுப்புலட்சுமி கலந்துக்காம இருந்தாங்க...''இது, சர்ச்சை ஆனதும், 'கட்சியில இருந்து விலகிடலாம்னு பார்க்கிறேன்'னு தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் சொல்லியிருக்காங்க...

இது, கருணாநிதி காதுக்கு போனதும், துரைமுருகனை விட்டு அவங்களை சமாதானம் செஞ்சு, கட்சியில நீடிக்க வச்சாருங்க...

''ஆனா, இந்த முறை அவங்க கட்சியை விட்டு போறதா தகவல் பரவியதும், அதை ஸ்டாலின் தரப்பு கண்டுக்கவே இல்லை... அவங்களும் ராஜினாமா பண்ணிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பாத்திரங்களை சுத்தம் செய்யாமலே சமைக்கறா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.

''எந்த ஹோட்டல்ல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''முழுசா கேளும்... வேலுார் மாவட்டங்கள்ல இருக்கற சத்துணவு மையங்களுக்கு, சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்ய, பவுடர் பாக்கெட்டுகளை அரசாங்கம் வழங்கறது... இப்ப, இந்த பவுடர் அளவை பாதியா குறைச்சுட்டா ஓய்...''இதனால, பாத்திரங் களை சுத்தம் செய்யாம, அதுலயே திரும்ப திரும்ப சமைச்சு, மாணவர்களுக்கு பரிமாறிண்டு இருக்கா...

சில நேரங்கள்ல, எலி, பல்லி எச்சங் களை கழுவாமலே சமைக்கறதால, மாணவர்கள் பலர் வயிற்று போக்கால சிரமப்படறா... பெரிய அளவுல விபரீதம் நடக்கறதுக்குள்ள, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தா நன்னாயிருக்கும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''நாங்க எப்படித் தான் பிழைக்கிறதுன்னு மூக்கால அழுதுட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''யாருக்கு, என்னப்பா பிரச்னை...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மதுரையில, ஒப்பந்த தாரர்கள் சங்கத்துல, 140 பேர் இருக்காவ... முன்னாடி எல்லாம், பொதுப்பணித் துறையில கட்டடம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்த பணிக்கு தனித்தனி அரசாணை போட்டு, சின்ன சின்ன ஒப்பந்ததாரர்களுக்கு குடுத்தாவ வே...''இப்ப, 'பேக்கேஜ்' முறையை கொண்டு வந்துட்டாவ...

அதிகாரி களிடம் கேட்டா, 'நாலு அரசாணையை சேர்த்து ஒரே ஆளுக்கு பேக்கேஜா குடுத்துட்டோம்... கட்டுமானம், பராமரிப்பு எல்லாம் ஒரே ஆள் தான் பார்க்கணும்... பிரிச்சு தர முடியாது'ன்னு கையை விரிச்சிட்டாவ வே..

.''அந்த பேக்கேஜ் டெண்டரையும், ஆளுங்கட்சியினர் தங்களுக்கு வேண்டிய கான்ட்ராக்டர்களுக்கு ஒதுக்கி குடுத்துட்டாவ...

சர்கியூட் ஹவுஸ் சீரமைப்புக்கு, 4.50 கோடி, வணிகவரி துறை வளாக கட்டுமான பணிக்கு, 2.50 கோடி ரூபாய்னு சமீபத்துல ஒதுக்கியிருக்காவ வே...''இந்த ரெண்டரை கோடியில, 55 லட்சம் தான் கட்டுமானத்துக்கு... மீதி தொகை முழுக்க, பராமரிப்புக்கு தான்...

'தி.மு.க.,வினரை தட்டி கேட்டா, எங்களை பிரிச்சு மேய்ஞ்சிடுவாங்க'ன்னு சின்ன ஒப்பந்ததாரர்கள் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''பேக்கேஜ் டெண்டரே இருக்காதுன்னு, ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி முழங்கினது எல்லாம் நடிப்பாயிடுத்து பார்த்தேளா...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.



பள்ளிக்கல்வி துறையில் கூண்டோடு இடமாறுதல்?


''ஆளுங்கட்சியினர் ஆசியோட மணல் கொள்ளை ஜரூரா நடக்குல்லா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''வேலுார் மாவட் டம், ஒடுக்கத்துார் சுற்றுவட்டாரத்துல, ஆசனாம்பட்டு, பங்கலபல்லி, அரவட்லா உள்ளிட்ட பகுதிகள்ல, 10க்கும் அதிகமான ஓடைகள் இருக்கு... இந்த ஓடைகள்ல இருந்து கள்ளத்தனமா சிலர் மணல் அள்ளுதாவ வே...''லாரிக்கு, 1,000, டிராக்டருக்கு, 500 ரூபாய்னு, ஆளுங்கட்சியினர் வாங்கிடுதாவ... இதனால, ஓடைகள்ல மண் வளம் குறைஞ்சு, நிலத்தடி நீர்மட்டம் வத்திட்டு இருக்கு...
ஆளுங்கட்சியினரை தட்டிக் கேட்டா, நம்ம பாடு திண்டாட்டமாகிடும்னு மாவட்ட நிர்வாகம் தயங்கிட்டு இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.

''வசூல் வேட்டைக்கு முடிவு கட்டப் போறா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''யாரு, என்னன்னு விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''இரும்... விஜயகாந்த் ஸ்டைல்ல புள்ளிவிபரத்தோட சொல்லிடறேன்... தமிழகத்துல இருக்கற, 388 ஊராட்சி ஒன்றியங்கள்ல, 12 ஆயிரத்து, 525 ஊராட்சிகள் இருக்கு ஓய்...''இந்த ஊராட்சிகள்ல மின் விளக்குகள், குடிநீர் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல செலவுகளுக்கு பணம் வேணுமோல்லியோ... அதுக்காக வீட்டு வரி, தொழில் வரின்னு மக்களிடம் வசூல் பண்றா ஓய்...

''இது தவிர மத்திய, மாநில அரசுகளும் நிதி தரது... இந்த வரியை எல்லாம், ஊராட்சி ஊழியர்களே நேரடியாக வசூல் செஞ்சு ரசீது தந்துடறா...

ஆனா, அந்த பணம் முழுசா ஊராட்சி ஒன்றி யத்துக்கு போய் சேர மாட்டேங்கறது ஓய்...

''வழியில, ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், 'பாக்கெட்'ல போய் உட்கார்ந்துக்கறது... இதுக்கு தான் இப்ப, 'செக்' வைக்கப் போறா ஓய்...

''அடுத்த வருஷத்துல இருந்து ஊராட்சி வரியை, 'ஆன்லைன்' மூலமா வசூலிக்கப் போறா... அதுக்காக, ஊராட்சிகள்ல எத்தனை வீடுகள், தொழில் நிறுவனங்கள், ஆபீஸ்கள் இருக்குன்னு, தற்காலிக பணியாளர்களை வச்சு இப்பவே கணக்கெடுக்க ஆரம்பிச்சுட்டா... ஊராட்சி தலைவர்களின் வசூல் வேட்டைக்கு, 'ஆப்பு' அடிக்க போறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பெஞ்சு தேய்ச்சிட்டு இருந்தவங்களை கிளப்பி விடப் போறாங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''பள்ளிக்கல்வி துறை ஊழியர்களுக்கு, வருஷா வருஷம் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்துவாங்க... இதுல கலந்துக்காம, 'டிமிக்கி' குடுத்துட்டு, ஒரே இடத்துல பல வருஷமா பெஞ்சு தேய்ச்சிட்டு பலர் இருக்காங்க...''சென்னை தலைமை அலுவலகம், தொடக்க கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த கல்வி திட்டம், அரசு தேர்வுத் துறை, மெட்ரிக் இயக்குனரகம்னு பல இடங்கள்ல, மூணு வருஷத்தை தாண்டியும், ஆணியடிச்ச மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கிற ஊழியர்கள் பட்டியல் தயாரா இருக்குதுங்க...


''அதோட, மாவட்ட சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்கள், அரசு மேல்நிலை பள்ளிகள்ல, மூணு வருஷம் தாண்டியும் பணியில நீடிக்கிற ஊழியர்களையும் பட்டியல்ல சேர்த்திருக்காங்க... அத்தனை பேரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவு போட்டிருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X