சுரங்கம் தோண்ட மேலும் 20 இயந்திரங்கள் இறக்குமதி செய்கிறது மெட்ரோ நிறுவனம்

Added : செப் 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு பாறைகளை உடைத்து சுரங்கம் தோண்ட, மேலும் 20 கன ரக இயந்திரங்களை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இறக்குமதி செய்ய உள்ளது.சென்னையில் இரண்டாம் கட்டமாக, மாதவரம் -- சிப்காட் வரை, 45 கி.மீ., துாரத்திற்கும், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ் வரை, 26.1 கி.மீ., துாரத்திற்கும், மாதவரம் -- சோழிங்கநல்லுார் வரை, 47 கி.மீ., துாரத்திற்கும், மெட்ரோ
சுரங்கம் தோண்ட மேலும் 20 இயந்திரங்கள் இறக்குமதி செய்கிறது மெட்ரோ நிறுவனம்

சென்னை:இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு பாறைகளை உடைத்து சுரங்கம் தோண்ட, மேலும் 20 கன ரக இயந்திரங்களை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இறக்குமதி செய்ய உள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்டமாக, மாதவரம் -- சிப்காட் வரை, 45 கி.மீ., துாரத்திற்கும், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ் வரை, 26.1 கி.மீ., துாரத்திற்கும், மாதவரம் -- சோழிங்கநல்லுார் வரை, 47 கி.மீ., துாரத்திற்கும், மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


இதில், மொத்தம் 43 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.சுரங்கம் தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள், முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரும்பாலும், உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைகின்றன. உயர்மட்ட பாதை பணிகளை, திட்டமிட்டபடி முடித்து விடுவோம். இதேபோல், சுரங்கப்பாதையில் அமையும் பாதைகள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளை முடிக்க தீவிரம் காட்டி வருகிறோம்.


மாதவரம் - ராயப்பேட்டை வரையில் பூமிக்கு அடியில் பாறைகள் குறைவாகவே உள்ளன. ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரை பாறைகள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக, மந்தைவெளி முதல் திருவான்மியூர் வரை, சில அடி ஆழத்திலேயே கடினமான பாறைகள் உள்ளன. மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில் நாதமுனி -- கொளத்துார் வரையிலான பாதையில், பூமியில் சில அடி ஆழத்திலேயே பாறைகள் வருகின்றன.


இதனால், இங்கு பணிகளை மேற்கொள்ள சவாலாக உள்ளது.டி.பி.எம்., எனப்படும் சுரங்கப்பாதை அமைக்கும் நான்கு கனரக இயந்திரங்கள் தற்போது தயாராக உள்ளன. மாதவரம் பகுதியில் அடுத்த மாதத்தில் சுரங்கம் தோண்டும் பணியை துவக்க உள்ளோம்.அதேபோல், பாறைகளை உடைத்து, சுரங்கம் தோண்டும் பணிக்காக, தற்போது 15 கனரக இயந்திரங்கள் பணிகள் மேற்கொண்டு வருகின்றன.


அடுத்தடுத்த இடங்களிலும் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், மேலும் 20 கனரக இயந்திரங்களை ஜெர்மனி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளோம். இந்த கனரக இயந்திரங்கள் வந்தவுடன், பணிகளை தீவிரப்படுத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Democracy - Madurai,இந்தியா
26-செப்-202200:06:32 IST Report Abuse
Democracy மெட்ரோ கட்டுமானத்தில் சீன நிறுவனங்களின் பங்களிப்பு என்னவென்று குன்றிய மாநில அரசுகள் வெளிப்படையாக சொல்லுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X