ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே படப்பை விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு, 48; கொத்தனார்.
அதேபகுதியை சேர்ந்த ஆசைதம்பி, 40, என்பவரை அழைத்து கொண்டு ஹோண்டா யூனிக்கான் மோட்டார் சைக்கிளில் பாபு பணிக்கு புறப்பட்டார்.வண்டலுார் - --வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், ஒரகடம் அருகே காணிதாக்கல் பகுதியை கடந்தபோது எதிர்திசையில் வந்த மினி வேன் மோதியது. இதில், பாபு சம்பவ இட்திலேயே பலியானார்.ஆசைதம்பி காயங்களுடன் ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.