ஆண்மை சுரப்பி புற்றுநோய் அதிகரிப்பு

Added : செப் 25, 2022 | |
Advertisement
சென்னை:நாட்டில் ஆண்மை சுரப்பி புற்றுநோய் அதிகரித்து வருவதாக, அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையின், புற்றுநோய் சிறப்பு நிபுணர் சப்னா நாங்கியா, மருத்துவ இயக்குனர் ராகேஷ் ஜலாளி, முதுநிலை சிறப்பு டாக்டர் சீனிவாஸ் சிலுகுரி ஆகியோர் கூறியதாவது:புற்றுநோய்க்கு எதிரான போரில் களத்தில் முன்னணியில் இருக்க
ஆண்மை சுரப்பி புற்றுநோய் அதிகரிப்பு

சென்னை:நாட்டில் ஆண்மை சுரப்பி புற்றுநோய் அதிகரித்து வருவதாக, அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையின், புற்றுநோய் சிறப்பு நிபுணர் சப்னா நாங்கியா, மருத்துவ இயக்குனர் ராகேஷ் ஜலாளி, முதுநிலை சிறப்பு டாக்டர் சீனிவாஸ் சிலுகுரி ஆகியோர் கூறியதாவது:


புற்றுநோய்க்கு எதிரான போரில் களத்தில் முன்னணியில் இருக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருகிறது.

சரியான சிகிச்சையை புற்றுநோயாளிகளுக்கு அளிக்கவும், புற்றுநோயை வென்று உயிர் வாழும் விகிதத்தை அதிகரிக்கவும், புற்றுநோய் மீதான ஆராய்ச்சி மிக அவசியம். நாட்டில், ஆண்கள் மத்தியில் ஆண்மை சுரப்பி புற்றுநோய், பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் மிக அதிகளவில் காணப்படுகிறது.


இதில், ஆண்மை சுரப்பி புற்றுநோய், வேகமாக பரவி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரிக்க கூடும். ஆண்மை சுரப்பி புற்றுநோய் பெருநகரங்கள், நகரங்களில் வசிக்கும் ஆண்கள் மத்தியில் மிக அதிகமாக காணப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சையில், இதய பாதிப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன.


ஆனால், புரோட்டான் சிகிச்சை முறை, ஆண்மை சுரப்பி, மார்பகம் போன்ற உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது. எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை. புற்றுநோயாளிகள் நீண்ட நாட்கள் வாழ்வதற்கும் இது உதவி புரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X