பென்ஷன்' வாங்காத ஒரே எம்.பி.,

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
ஒரு முன்னாள் எம்.பி.,யால், ராஜ்யசபா தலைவருக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த முன்னாள் எம்.பி., ஜோதி. வழக்கறிஞரான இவர், ஜெயலலிதாவின் வழக்குகளை முன்னின்று நடத்தி, பல வழக்குகளில் வெற்றியும் பெற்றவர்.பின் சசிகலா, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்னையால் தி.மு.க.,வில் இணைந்து, இப்போது அரசியலிலிருந்து ஒதுங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார். பென்ஷன், இலவச ரயில் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஒரு முன்னாள் எம்.பி.,யால், ராஜ்யசபா தலைவருக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த முன்னாள் எம்.பி., ஜோதி. வழக்கறிஞரான இவர், ஜெயலலிதாவின் வழக்குகளை முன்னின்று நடத்தி, பல வழக்குகளில் வெற்றியும் பெற்றவர்.பின் சசிகலா, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்னையால் தி.மு.க.,வில் இணைந்து, இப்போது அரசியலிலிருந்து ஒதுங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார்.



latest tamil news



பென்ஷன், இலவச ரயில் பயணம் போன்ற சலுகைகளை உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற எம்.பி.,க்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஜோதி, தன் எம்.பி., பதவிக்கான ஓய்வு ஊதியத்தை வாங்க மறுத்துவிட்டார். அதோடு அவருக்கு கிடைக்கும் ரயில் பயண சலுகை, மருத்துவ சலுகைகள் எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.இது, ராஜ்யசபா அலுவலகத்தில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஜோதியின் பென்ஷன் பணம் அதிகமாக சேர்ந்துள்ளது. இதை என்ன செய்வது என அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.


latest tamil news



இந்த விவகாரத்தை ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரிடம் தெரிவித்தனர்.ஆச்சரியப்பட்ட தன்கர், இந்தியாவிலேயே ஜோதி ஒருவர் தான் பென்ஷன் வாங்காத முன்னாள் எம்.பி., என பாராட்டியுள்ளார். இதற்கு தீர்வு என்ன என இவர் கேட்க, இந்த பணத்தை அரசிடம் வழங்க ராஜ்யசபாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202213:15:50 IST Report Abuse
N SASIKUMAR YADHAV சாராய ஆலைகளையும் நடத்திக்கொண்டு பென்சன்களையும் வாங்கும் தீயமுக களவானிங்களை பற்றி யாரும் இதில் பதிவு போடவில்லையே
Rate this:
Cancel
25-செப்-202212:06:52 IST Report Abuse
தமிழ் இப்போதெல்லாம் அரசு வேலையில் சேரும்போதே பென்ஷன் கிடையாது என்று சொல்லிவிடுகிறார்கள். அதேபோல் அரசியல்வாதிகளுக்கும் பென்ஷன் கிடையாது என்று சட்டம் இயற்றவேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-செப்-202211:57:05 IST Report Abuse
duruvasar 97 வயது வரை ஒன்றல்ல 5 பென்ஷன் வாங்கிக்கொண்டிருந்தவரும் ஒரு திராவிடனே. இதிலும் தமிழகம்தான் முதன்மை மாநிலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X