கருணாநிதி நினைவு நூலகம்: பொங்கலில் திறக்க ஏற்பாடு

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை-மதுரையில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவு நுாலகத்தை, பொங்கல் பண்டிகையின் போது திறக்கும் வகையில் பணியை விரைவுபடுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நினைவு நுாலகத்தை போன்று, மதுரையில் நுாலகம் கட்டும் பணி, ஜன., 1௧ல் துவங்கியது. 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம், 2 லட்சம் சதுர அடியில், இந்த பிரமாண்ட

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-மதுரையில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவு நுாலகத்தை, பொங்கல் பண்டிகையின் போது திறக்கும் வகையில் பணியை விரைவுபடுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.




latest tamil news


சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நினைவு நுாலகத்தை போன்று, மதுரையில் நுாலகம் கட்டும் பணி, ஜன., 1௧ல் துவங்கியது. 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம், 2 லட்சம் சதுர அடியில், இந்த பிரமாண்ட நுாலகம் அமைய உள்ளது. முதல் தளம் 3,110 சதுர அடியில் அமைகிறது. இதில் குழந்தைகள் நுாலகப் பிரிவு, பருவ இதழ்கள், நாளிதழ்கள் பிரிவுகளும் இடம்பெறுகின்றன. இரண்டாம் தளத்தில், 3,110 சதுர அடியில் தமிழ் நுால்கள் பிரிவும்; மூன்றாம் தளத்தில், 2,810 சதுர அடியில் ஆங்கில நுால்கள் பிரிவும் அமைய உள்ளன.



நான்காம் தளத்தில், 1,990 சதுர அடியில் அமரும் வசதியுடன் கூடிய ஆங்கில நுால் பிரிவு அமையவுள்ளது. ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நுாலகம், அரிய நுால்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நுால்கள் பிரிவு அமையவுள்ளன.ஆறாம் தளத்தில், 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நுால் கொள்முதல் பிரிவு, நிர்வாக அலுவலகம் ஆகியவை அமையவுள்ளன.தற்போது கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.



latest tamil news


ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையின்போது, மதுரையில் ஜல்லிக்கட்டு திருவிழா களைகட்டும். போட்டிகளை துவக்கி வைக்க, முதல்வர் ஸ்டாலின் செல்ல உள்ளார்.அப்போது, இந்த பிரமாண்ட நுாலகத்தையும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவர் அர்ப்பணிக்க உள்ளதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202214:35:54 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 .........
Rate this:
Cancel
Tamilan - Tuticorin,பஹ்ரைன்
25-செப்-202212:34:37 IST Report Abuse
Tamilan முதலில் எங்களுக்கு தேவைப்படுவது அடிப்படை வசதி அது இப்பொது இல்லை
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-செப்-202211:52:48 IST Report Abuse
duruvasar மற்றொரு இந்தியன் ஆயில் எரிபொருள் சேமிப்பு கிடங்கு மாடல் கட்டிடம். சூப்பரப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X