ஒடிசாவிலிருந்து 1,000 கோடி கிலோ நிலக்கரி எடுத்து வர மின் வாரியம் முடிவு

Added : செப் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை-ஒடிசாவின் சந்திரபிலா சுரங்கத்தில் வன பகுதியை தவிர்த்து, மற்ற இடங்களில் இருந்து ஆண்டுக்கு, 1,000 கோடி கிலோ நிலக்கரியை, தமிழகத்திற்கு எடுத்து வரும் பணியை, மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது. தமிழக மின் வாரியம், திருவள்ளூர், துாத்துக்குடி மாவட்டங்களில், 4,100 மெகா வாட் திறனில், நான்கு அனல் மின் நிலையங்கள் அமைத்து வருகிறது. இவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-ஒடிசாவின் சந்திரபிலா சுரங்கத்தில் வன பகுதியை தவிர்த்து, மற்ற இடங்களில் இருந்து ஆண்டுக்கு, 1,000 கோடி கிலோ நிலக்கரியை, தமிழகத்திற்கு எடுத்து வரும் பணியை, மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது.latest tamil newsதமிழக மின் வாரியம், திருவள்ளூர், துாத்துக்குடி மாவட்டங்களில், 4,100 மெகா வாட் திறனில், நான்கு அனல் மின் நிலையங்கள் அமைத்து வருகிறது. இவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்பட உள்ளது.இதற்காக ஒடிசா மாநிலம், ஆங்கூல் மாவட்டத்தில், 90 ஆயிரம் கோடி கிலோ நிலக்கரி இருப்பு உடைய சந்திரபிலா சுரங்கத்தை, தமிழக மின் வாரியத்திற்கு, மத்திய நிலக்கரி அமைச்சகம் 2016ல் ஒதுக்கீடு செய்தது.அங்கிருந்து நிலக்கரி எடுத்து வர ஆர்வம் காட்டாத மின் வாரியம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு மேல் நிலக்கரி வாங்கி வந்தது.நீண்ட இழுபறிக்கு பின், சந்திரபிலாவில் இருந்து ஆண்டுக்கு 1,000 கோடி கிலோ என, 35 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுத்து, தமிழகத்திற்கு 'சப்ளை' செய்யும் பணிகளை செய்ய மின் வாரியம், 2019ல் 'டெண்டர்' கோரியது.அதில் ஒரு நிறுவனம் பங்கேற்ற நிலையில், 2020ல் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.அந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் டெண்டர் கோரப்பட்ட நிலையில், ஒரு நிறுவனம் கூட பங்கேற்காததால் அதுவும் ரத்து செய்யப்பட்டது.சந்திரபிலா சுரங்கம் அமைந்துள்ள ஒட்டுமொத்த நில பகுதியில் மூன்றில் ஒரு பங்கு இடம், மத்திய வனத் துறை வசம் வருகிறது. அங்கு நிலக்கரி எடுக்க வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் தான் நிலக்கரி எடுக்கும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள நிறுவனங்கள் முன்வரவில்லை என்பதை மின் வாரியம் கண்டறிந்தது.


latest tamil newsஎனவே, முதல் கட்டமாக வன பகுதி இடம்பெறாத பகுதிகளில் இருந்து, நிலக்கரி எடுத்து வரும் பணிகளை துவக்க முடிவு செய்த மின் வாரியம், அதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது.அதன் அடிப்படையில், தற்போது வனப்பகுதி அல்லாத இடங்களில் இருந்து ஆண்டுக்கு, 1,000 கோடி கிலோ நிலக்கரியை 28 ஆண்டுகளுக்கு எடுத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்யும், 'டெண்டர்' பணிகளை, மின் வாரியம் விரைவில் மேற்கொள்ள உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,இந்தியா
25-செப்-202209:34:46 IST Report Abuse
Fastrack முன்பு டன்களில் சொல்வார்கள் ..ஒரு கோடி டன் என்றால் கிட்டத்தட்ட 4000 ரயில் வண்டிகள் ...ஒருநாளைக்கு பத்து ரேக்குகள் ...ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பல்கள் வரவழைத்தால் செலவு குறையுமே ..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-செப்-202207:08:54 IST Report Abuse
Kasimani Baskaran குட்ஸ் வண்டியின் டயர் பஞ்சராகிவிட்டது - ஆகையால் நிலக்கரியை கொண்டுவர முடியவில்லை. அவசரத்தேவைக்காக மின்சாரம் கொள்முதல் செய்ய நிதியமைச்சர் அவசரமாக ₹ பத்தாயிரம் கோடி விடுவிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
25-செப்-202206:04:38 IST Report Abuse
Neutral Umpire அதானி இந்திய அளவிலும் ஜெகத்ரக்ஷகன் லோக்கல் அளவிலும் நிலக்கரி தொழில் செய்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X