உலக தமிழாராய்ச்சி மாநாடு 2023ல் சிங்கப்பூரில் நடக்கிறது

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை-உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18 வரை, சிங்கப்பூரில் நடக்க உள்ளது. உலக தமிழ் ஆய்வு மன்றம் துவங்கப்பட்ட 1964ம் ஆண்டு முதல், இதுவரையில் 10 உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடந்துள்ளன. 11ம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூரில், 2023ம் ஆண்டு ஜூன் 16 முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.இந்த மாநாட்டுக்கான சின்னத்தை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவரும்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18 வரை, சிங்கப்பூரில் நடக்க உள்ளது.
latest tamil news


உலக தமிழ் ஆய்வு மன்றம் துவங்கப்பட்ட 1964ம் ஆண்டு முதல், இதுவரையில் 10 உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடந்துள்ளன. 11ம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூரில், 2023ம் ஆண்டு ஜூன் 16 முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.இந்த மாநாட்டுக்கான சின்னத்தை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவரும், முன்னாள் துணை வேந்தருமான முனைவர் பொன்னவைகோ, சென்னையில் நேற்று வெளியிட்டார்.பின், அவர் அளித்த பேட்டி: புதிய வரலாற்றியல் கண்ணோட்டத்தில், செவ்விலக்கியங்களை ஆராய்ந்து, அண்மைக்கால அகழாய்வுகளோடு, அறிவியல் சான்றுகளை முன்வைத்து, தமிழர், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் உண்மையான வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தலே, இந்த 11வது மாநாட்டின் அடிப்படை நோக்கம்.இதை விரிவுபடுத்தும் வகையில் செவ்விலக்கியம், பழந்தமிழரின் நாகரிகம், தொல்காப்பியம், திருக்குறள், தமிழ் இசையும் கலைகளும், தற்காலத் தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்ட, 10 ஆராய்ச்சிப் பிரிவுகளின் கீழ் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.ஒவ்வொரு ஆராய்ச்சி பிரிவின் கீழ் பல தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆராய்ச்சி சுருக்கத்தை, academic-committee@icsts11.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, அக்., 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு icsts11.org, iatrofficial.org ஆகிய இணையதளங்களை அணுகலாம்.சிறந்த கட்டுரைகளை உருவாக்கிய ஐந்து பெண்கள் உட்பட 15 அறிஞர்கள், மாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.latest tamil news


மேலும், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள் மாநாட்டில் வாசிக்கப்படுவதோடு, அங்கு வெளியிடப்படும் மடலிலும் இடம்பெறும். இந்த மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கோ.பெரியண்ணன், முனைவர் வாசுகி கண்ணப்பன், ஒருங்கிணைப்பாளர்கள் அர்த்தநாரீஸ்வரன், சேயோன், கவிஞர் எஸ்.விஜயகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
25-செப்-202214:03:51 IST Report Abuse
vpurushothaman ஸ்டாலினுக்கும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கும் என்ன சம்பந்தம் ?
Rate this:
Cancel
Ragavan Poovizhi - dharmapuri,இந்தியா
25-செப்-202213:04:15 IST Report Abuse
Ragavan Poovizhi ஆம் தமிழர் மாநாட்டுக்கு தெலுங்கர் எதற்கு
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
25-செப்-202208:57:39 IST Report Abuse
J. G. Muthuraj சிறந்த கட்டுரையாளர்கள் மாநாட்டுக்கு அழைத்து செல்லப்படுவர் என்று சொல்கிறார்கள்.. அந்த செலெக்ஷனில் ஜாதி, மதம், வேண்டியவன்/வேண்டப்படாதவன் அப்படீன்னு பல க்ரைடீரியா பின்பற்றப்படும்.. மாநாட்ல புதுசா ஒன்னும் நிகழப் போவதில்லை.. சொன்னதையேதான் சொல்லிக்கிட்டு இருப்பாங்க.. ஒருத்தனுக்கொருத்தன் பொன்னாடை போட்டு.. வீடியோ, போட்டோ அப்படீன்னு ....முதலமைச்சர் இப்படிப்பட்ட கூடுகைக்கு செல்லக்கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X